வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

0

நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன. 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். 

அந்த வகையில் நாம் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மூளை 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். 

நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். 

குறிப்பாக கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். 

பெரிய சோம்பேறி யார்? தெரியுமா?

புற்று நோய் 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

நமது உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. 

இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய் கொண்டுள்ளது. 

எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. 

நோய் எதிர்ப்பு சக்தி 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். 

வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

எள்ளு போச்சு... எண்ணெய் வந்தது சிறுகதை !

கொலஸ்ட்ரால் 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயராது. 

எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம். 

ஞாபகசக்தி 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் 

வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும். 

ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !

கல்லீரல் 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. 

இந்த பிரச்னையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பாக செயல்படுகிறது. 

தினமும் உணவின் போது வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும். 

வயிறு

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? 

இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும். 

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி !

சிறுநீரகம் 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. 

ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இந்த சத்துக் குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம். 

உடல் எடை 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற அதீத பசி உணர்வு தான். 

வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், இந்த அதீத பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும். 

வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை !

நீரிழிவு நோய் 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். 

எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)