பச்சை மிளகாய் சாப்பிட்டால் இப்படி எல்லாம் நடக்குமா?

பச்சை மிளகாய் சாப்பிட்டால் இப்படி எல்லாம் நடக்குமா?

0
பச்சை மிளகாய் என்றவுடன் பலருக்கு காரம் தான் நினைவுக்கு வரும். பச்சை மிளகாயில் இருக்க கூடிய சத்துக்கள், நன்மைகள் என்ன என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
பச்சை மிளகாய் சாப்பிட்டால் இப்படி எல்லாம் நடக்குமா?
காரம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சிலர் இதனை ஒதுக்குவதும் உண்டு. பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.
 
நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும்
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். 
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
 
பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கலோரிகள் அற்றது
 
பச்சை மிளகாயில் கலோரிகளே கிடையாது. அதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் டையட்டில் இருக்கும் போது இதனை பயன்படுத்தலாம்.
 
ஆண்களுக்கு சிறந்தது
 
ஆண்கள் பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.
 
உணவு செரிமானம் வேகமாக நடக்கும்
பச்சை மிளகாய் சாப்பிட்டால் இப்படி எல்லாம் நடக்குமா?
பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக, பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.
 
ஆன்டி பாக்டீரியா குணங்களை கொண்டுள்ளது
 
பச்சை மிளகாயில் ஆன்டி பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.
 
இரும்புச்சத்து
 
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மிளகாய் ஆரோக்கிய மானதாகும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
​சளியிலிருந்து விடுதலை
 
பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் சவ்வுகள் வழியாக ரத்தம் பாய தூண்டுகிறது .இதனால் சளி சுரப்பது குறைகிறது. இதன் மூலம் சளி போன்ற தொற்று களிலிருந்து நம்மை காப்பாற்றி நமக்கு நன்மை அளிக்கிறது.
பக்க விளைவுகள்
 
பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு வயிற்று வலி 

அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப் போக்கு ஏற்படும். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும்.
 
எனவே நீங்கள் பச்சை மிளகாயை தவிர்ப்பது நல்லது. பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. நமது உடலில் இது அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை ஏற்படும்.
 
​தினசரி உணவில் பச்சை மிளகாயைச் சேர்ப்பது எப்படி?
பச்சை மிளகாய் சாப்பிட்டால் இப்படி எல்லாம் நடக்குமா?
பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. சொல்லப் போனால் நாம் ஆம்லெட் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் அதில் பொடித்தாக நறுக்கிய பச்சை மிளகாய் தூவி விட வேண்டும்.
 
அதே போல் குழம்பு பொரியல் கூட்டு அனைத்திலும் முடிந்தவரைப் பச்சை மிளகாயை அதிகம் சேர்த்து வந்தால் நிச்சயம் பலன் தரும். சிலர் பச்சை மிளகாயை அப்படியே சாப்பிடவும் செய்வார்கள்.
 
ஆனால் அது அனைவராலும் செய்வது கடினம் எனவே நாம் தினமும் உணவில் முடிந்த வரை பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டால் உணவிற்குக் கூடுதல் ருசி மட்டுமல்லாமல் நம் உடல் எடையைக் குறைக்க அது பெரிதும் உதவி செய்கிறது.
முடிவு
பச்சை மிளகாயை சாப்பிடுவதால் நிறைய பலன்கள் உண்டு. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது தீய விளைவை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
மேலும் அது மற்ற நோய்களிலிருந்து நம்மை தடுத்தாட் கொள்ளாது என்பதால் அதனை எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)