சுவையான குங் பாவ் பன்னீர் செய்வது எப்படி?





சுவையான குங் பாவ் பன்னீர் செய்வது எப்படி?

0
பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத் தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. 
சுவையான குங் பாவ் பன்னீர் செய்வது எப்படி?
பன்னீரில் கால்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் எ, வைட்டமின் டி என பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. 

அதிகளவு உடற்பயிற்சி செய்யும் நபர்கள் அதிகளவு புரதம் கொண்ட பன்னீரை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

மூட்டு வலியால் பாதிக்கப் படுபவர்கள் பன்னீரை சேர்த்துக் கொள்ளலாம். சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு அளிக்கிறது. 
பன்னீரில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவும். மேலும் இதில் லாக்டோஸ் அளவு குறைவாக இருப்பதால் பல் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

நீங்கள் பன்னீர் பிரியரா? சைனீஸ் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் இன்று இந்தோ-சைனீஸ் ரெசிபியை நாம் பார்ப்போம். இந்த ரெசிபியின் பெயர் குங் பாவ் பன்னீர். 

இந்த பன்னீர் ரெசிபியில் பன்னீரை வறுத்து சாஸ் உடன் சேர்த்து செய்வோம். இந்த குங் பாவ் பன்னீர் ப்ளைன் ரைஸ் அல்லது சீசுவான் ரைஸ் உடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

சரி இனி பன்னீர் கொண்டு குங் பாவ் பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் : .
 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 
வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
 
வரமிளகாய் - 4-5
 
சிவப்பு குடை மிளகாய் - 1/2 (மெல்லிய துண்டுகளாக நறுக்கியது)
 
ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கைளயவு (பொடியாக நறுக்கியது)
 
பன்னீருக்கு...
 
பன்னீர் - 200 கிராம்
 
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
 
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
 
தண்ணீர் - தேவையான அளவு

பிளாஸ்டிக்கை மென்னு தின்று விடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு !  

சாஸ் தயாரிப்பதற்கு...
 
வெஜிடேபிள் ஸ்டாக் - 1 கப் அல்லது 1 க்யூப்
 
உப்பு - சுவைக்கேற்ப
 
சர்க்கரை - 1 டீஸ்பூன்
 
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
 
வினிகர் - 1 டீஸ்பூன்
 
சோள மாவு - 1 1/2 டீஸ்பூன்
 
செய்முறை : .
சுவையான குங் பாவ் பன்னீர் செய்வது எப்படி?
முதலில் ஒரு வெஜிடேபிள் ஸ்டாக் க்யூப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வெது வெதுப்பான நீரை ஊற்றி சிறிது நேரம் க்யூப் கரையும் வரை ஊற வையுங்கள்.
 
பின் அதில் சோயா சாஸ், வினிகர், சிறிது சர்க்கரை, உப்பு, சோள மாவு சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எலும்புகளால் உருவான சாலை... எங்கு தெரியுமா? 

பின் அதில் சோயா சாஸ், உப்பு, சோள மாவு, சிறிது நீர் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
 
பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து வறுத்து இறக்கி ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் அதே பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின் அதில் வரமிளகாள், வேர்க்கடலை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்க வேண்டும். அதன் பின் சிவப்பு குடை மிளகாயை சேர்த்து ஒரு முறை கிளறி, தயாரித்து வைத்துள்ள சாஸை ஊற்றி கிளறி, கொதிக்க வையுங்கள்.
பெண்கள் புறா வளர்க்கக் கூடாது? ஏன் தெரியுமா?
கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க வைத்து, மேலே ஸ்ப்ரிங் ஆனியனை தூவி நன்கு கிளறி இறக்கினால், குங் பாவ் பன்னீர் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)