காபி தூளிலும் பளிச் என மின்னும் முகம்... காபி ஃபேஸ் பேக் !





காபி தூளிலும் பளிச் என மின்னும் முகம்... காபி ஃபேஸ் பேக் !

0
காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம்.
காபி தூளிலும் பளிச் என மின்னும் முகம்... காபி ஃபேஸ் பேக் !
உடலோ மனமோ சோர்ந்திருக்கும் போது ஒரு கப் காபி குடித்தால் உடனடியாக உற்சாகமாகி விடுகிறோம். அது போன்று தான் சருமமும். 

சருமத்தில் சோர்வோ களைப்போ தெரிந்தால் உடனே சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்க என்ன வெல்லாமோ செய்கிறோம். 
அப்படி சருமத்துக்கு தரும் புத்துணர்ச்சியை சிறப்பாக தருகிறது காபி பவுடர். இது நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது.

என்னடா நம்ம காபி குடிக்க மட்டும் தான பயன்படுத்துவோம். இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காபி தூள் நம்ம முகத்த அழகாக்கவும் பயன்படுகிறது.
காபி பொடியில் இருக்கும் வேதிபொருள்கள் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை சீராக்குகிறது. 

சருமத்தை தளராமல் வைத்திருக்க உதவுகிறது. என்றும் இளமை தோற்றத்தை முகத்துக்கு தர உதவுகிறது. அதோடு சருமத்தில் இறந்த செல்களை அவ்வபோது நீக்கி பொலிவு தரவும் உதவுகிறது. 

காபியில் பல நன்மைகள் உள்ளன, அவற்றில் ஒன்று தோல் பராமரிப்பு. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி ஏஜிங் பண்புகள் நிறைந்த காபி, அற்புதமான சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.
 
உண்மையில், காபியை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் அழற்சி மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது. 
காபி தூளிலும் பளிச் என மின்னும் முகம்... காபி ஃபேஸ் பேக் !
காபி மற்றும் பால் முகமூடியைத் தயாரிக்க, இரண்டு தேக்கரண்டி காபி தூள் மற்றும் பால் எடுத்துக் கொள்ளுங்கள். 

இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். உங்கள் முகத்தில் 10-15 நிமிடங்கள் வைத்த பிறகு, வெது வெதுப்பான நீரில் கழுவவும். 

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

நீங்கள் மென்மையான சருமத்தைப் பெற விரும்பினால், காபி மற்றும் பால் முகமூடி ஒரு எளிய மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாகும். இது உங்கள் முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும்.

தினமும் அல்லது வாரத்துக்கு மூன்று நாள் முகத்தில் தடவி வந்தால் விரைவில் முகத்தில் மாசு மருவில்லாமல் பளிச்சென்று இருக்கும். முதல் இரு முறையில் இதை நீங்கள் உணர்வீர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)