சுவையான பசலைக்கீரை கட்லெட் செய்வது எப்படி?

சுவையான பசலைக்கீரை கட்லெட் செய்வது எப்படி?

0
மலச்சிக்கல், தொந்தி  மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை படுதல் போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறப்பான மருத்துவ பொருளாகும். 
சுவையான பசலைக்கீரை கட்லெட் செய்வது எப்படி?
ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும். அது மட்டுமின்றி, உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. 
இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. பசலைக் கீரையில் குறைந்த கலோரிகள் இருப்பதால் இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

பசலைக் கீரையில் இருக்கும்  புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. பசலைக் கீரையில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். 

இதுவரை பசலைக்கீரை கொண்டு எத்தனையோ ரெசிபிக்களை பார்த்திருப்போம். ஆனால் கட்லெட் செய்வது பற்றி பார்த்திருக்க மாட்டோம். 

ஆகவே இப்போது மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறான பசலைக்கீரை கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
 
தேவையான பொருட்கள் : .
 
பசலைக்கீரை - 2 கப் (நறுக்கியது)
 
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
 
வெங்காயம் - 1 (நறுக்கியது)
 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
 
கடலை மாவு - 1 கப்
 
பிரட் தூள் - 2 கப்
 
தண்ணீர் - 1/2 கப்
 
உப்பு - தேவையான அளவு
 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு ? 
செய்முறை : .
சுவையான பசலைக்கீரை கட்லெட் செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
 
பின்னர் அதில் பசலைக்கீரை சேர்த்து, 2-3 நிமிடம் பிரட்டி விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து மற்றொரு பௌலில் கடலை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். 
இவர்கள் லுங்கி, பணியன் அணிய கூடாது தெரியுமா?
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், 

உருட்டி வைத்துள்ள உருண்டையை தட்டையாக தட்டி, கடலை மாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 

இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பசலைக்கீரை கட்லெட் ரெடி!!!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)