தேநீருடன் உட்கொள்ளும் இந்த பொருட்கள் தீங்கு விளைவிக்கும் !

தேநீருடன் உட்கொள்ளும் இந்த பொருட்கள் தீங்கு விளைவிக்கும் !

0
பெரும்பாலானோர் தேநீருடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். சிலருக்கு காலையில் டீ கிடைக்காமல் போனால் தலைவலி வந்து விடும். 
தேநீருடன் உட்கொள்ளும் இந்த பொருட்கள் தீங்கு விளைவிக்கும் !
இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதற்கு அடுத்தபடியாக, அதிக அளவில் மக்கள் டீ பருகுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுது போக்காகவும் உள்ளது. 
 
அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற நிலை கூட சில சமயம் ஏற்படுகிறது. 
 
அதிலும் பெரும்பாலானோர், தேநீருடன் ஏதாவது நொறுக்கு தீனிகள் அல்லது பிஸ்கட் சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். 

மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

எனினும், தேநீருடன் உட்கொள்ளும் சில பொருட்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
 
முட்டை
 
தேநீருடன் உட்கொள்ளும் இந்த பொருட்கள் தீங்கு விளைவிக்கும் !

சிலருக்கு டீயுடன் முட்டை சாப்பிடுவது பிடிக்கும். இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 
 
ஏனெனில் தேயிலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதத்துடன் கலக்கும் போது, ​​அமிலங்கள் புரோட்டீன் கலவைகளை உருவாக்கி மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் அபாயத்தை அதிகரிக்கும்.

ஆப்கன் பெண்களின் நிலை... ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது?

கடலை மாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்
 
மழைக்காலத்தில் டீயுடன் பகோடா பஜ்ஜி சாப்பிடுவது பிடிக்காது என யாராவது கூறுவார்களா என்ன... ?
 
ஆனால் கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை டீயுடன் உட்கொண்டால், அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். 
 
இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும்.
 
இனிப்பு பிஸ்கட்
தேநீருடன் உட்கொள்ளும் இந்த பொருட்கள் தீங்கு விளைவிக்கும் !
டீயுடன் இனிப்பு பிஸ்கட் சாப்பிடுவதையும் பெரும்பாலானோர் விரும்புவார்கள். தேநீருடன் இனிப்பு பிஸ்கட்களை உட்கொள்வது சர்க்கரையின் அளவை பெரிதும் அதிகரிக்கும். 

பழையபடி கரியால் பல் துலக்கும் ஆங்கிலேயர்கள் !

உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகனால், உடல் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும். சர்க்கரை தொடர்ந்து கட்டுக்குள் இல்லை என்றால், சிறுநீரகம், கண் போன்ற சில உறுப்புகளும் பாதிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)