கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

0

வெளியே கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சிலர் ஏசி மற்றும் ஏர் கூலரை பயன்படுத்தி நிம்மதி அடைவார்கள். 

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

பல நேரங்களில் இந்த சாதனங்களின் துணையுடன் இருந்தாலும் கூட, சிலருக்கு சருமத்தில் முகப்பரு அல்லது வியர்க்குரு ஏற்படும் அல்லது சருமத்தின் நிறம் மாறுபடும்.

கோடைக்காலத்தில் மிகவும் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் வியர்வை மற்றும் நீரிழப்பு தான் இதற்கு காரணம். 

நீரிழப்பு நம் சருமத்தையும் பாதிக்கிறது, வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. எனவே நம் உடலில் நீர் சமநிலையை பராமரிக்க, போதுமான தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

ஆனால் ஆரோக்கிய மற்றும் ஊட்டமான சருமத்தைப் பெற வெறும் தண்ணீர் மட்டும் போதாது, கொலாஜன் என்ற புரதமும் தேவை. 

எலும்புகள், மூட்டுகள், ரத்தம், தசைகள் மற்றும் குருத்தெலும்புகளில் இந்த கொலாஜன் இருக்கும். இது ஆரோக்கிய சருமத்திற்கும், உடலுக்கு நெகிழ்ச்சி மற்றும் வலிமையைக் கொடுக்கும் மிக முக்கிய புரதமாகும்.

மொத்த உடல் புரதத்தில் மூன்றில் ஒரு பங்கை கொலாஜன் தான் உருவாக்குகிறது. வயதுக்கு ஏற ஏற கொலாஜன் உற்பத்தி உடலில் குறைய தொடங்குகிறது. 

நமது சருமத்திற்கு விரைவில் முதுமை ஏற்படாமல் இருக்க கொலாஜன் நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியம்.

கொலாஜன் அளவு குறைவதால் மூட்டு விறைப்பு மற்றும் பலவீனமான எலும்புகள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தற்போது இங்கே கொலாஜன் நிறைந்த சில முக்கிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.

கொலாஜன் என்பது என்ன?

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே கொலாஜன் (Collagen). இந்த புரதச்சத்து சருமங்களில் அதிகமாக இருக்கும். ஒருவருடைய சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம். 

இது சருமங்களில் மட்டுமல்லாமல் எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதையிலும் உற்பத்தியாகிறது.

பொதுவாக கொலாஜன் என்பது உடலுக்கு மிக அவசியமாகிறது என்றாலும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. 

நம் உணவு முறையில் சில மாற்றங்களை செய்யும் போது நம் உடலில் கொலாஜன் இயற்கையாகவே உற்பத்தியாகும். 

உடலில் கொலாஜன் உற்பத்தி குறைந்தாலும் சரியான உணவு முறையின் மூலம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

சிக்கன்: 

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

நம் உடலில் கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள் சிக்கனில் அதிகம் காணப்படுகின்றன. 

தவிர பல ஆய்வுகள் கோழியின் சில பகுதிகள் (கழுத்து மற்றும் குருத்தெலும்பு) கொலாஜனின் சிறந்த மூலம் என்றும் மற்றும் ஆர்த்தரட்டிஸ் கோளாறுக்கு சிகிச்சையளிக்க உதவக்கூடும் என்பதை கண்டறிந்துள்ளன.

குடைமிளகாய் : 

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

குடைமிளகாயில் மிளகாயில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், அமினோ ஆசிட்ஸ் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. 

தவிர இதில் காணப்படும் கேப்சைசின் (capsaicin ) எனப்படும் அழற்சி எதிர்ப்பு கலவை சருமம் முதுமை அடைவதை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மீன்: 

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்கள், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சக்திவாய்ந்த ஆதாரமாக மீன் இருக்கிறது. 

தவிர பல வெரைட்டி மீன்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால், ஒளிரும் மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகின்றன.

சிட்ரஸ் பழங்கள்: 

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் இருக்கின்றன. 

இவை உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவது மட்டுமல்லாமல் நச்சுகளை வெளியேற்றி, நல்ல ஊட்டமான சருமத்தை பெற உதவும். 

சிட்ரிக் பழங்கள் தோல் அழற்சியை (skin inflammation) எதிர்த்து போராடவும் உதவுகின்றன.

பச்சை இலை காய்கறிகள்: 

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

கீரை, முட்டைக்கோஸ் போன்ற இலை காய்கறிகள் சூப்பர்ஃபுட் வகையை சேர்ந்தவை.

ஏனெனில் இது நமது உடலின் ஒட்டு மொத்த வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது. 

இதில் உள்ள குளோரோபில் (chlorophyll), கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)