விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்? சில டிப்ஸ் !

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்? சில டிப்ஸ் !

0

நம்மில் பல ஆண்களுக்கு செக்ஸ் வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சிலருக்கு விந்தணு குறைபாட்டால் பாலியல் உறவில் விரிசல் ஏற்படுகிறது. 

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

இனிமேல், ஆண்மை குறித்த ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் பயம் கொள்ளவோ, எதுவும் செய்ய முடியாது என நம்பிக்கை இழக்கவோ வேண்டாம். 

இயற்கை முறையில் தினசரி உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மூலம் ஆண்மையை அதிகரித்து விடலாம்.

செக்ஸ் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். பாலுறவு மற்றும் சுய இன்பத்தின் போது ஆணுறுப்பின் வழி வெளியேறும் திரவத்தை தான் விந்து என்று அழைக்கிறோம். 

இது ஆங்கிலத்தில் செமன் (semen) என்று கூறப்படுகிறது. இந்த விந்துவுக்குள் இருக்கும் அணுக்கள் தான் sperm என்று அழைக்கப்படுகிறது. இந்த விந்தணுக்கள் தான் நீந்தும் தன்மை கொண்டவை. 

இதனுள் தான் ஆணின் மரபணுக் கூறுகள், புரதங்கள் உள்ளிட்டவை அடங்கி இருக்கும். உடலுறவின் போது விந்துவாகிய நீர்மம் வெளியேறி விடும். விந்தணுக்கள் நீந்தி பெண்ணின் கருப்பையைச் சென்றடையும்.

எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகள் உங்கள் செக்ஸ் உணர்வை தூண்டி இல்லற வாழ்வை சிறப்பாக்குகின்றன.

ஜிங்க் உணவுகள்:

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகளை ஆண்கள் உட்கொள்ள வேண்டும். 

இந்த உணவுகள் விந்து அணுக்கள் நன்கு இயங்கவும், பெண்ணின் உடலில் நீந்தி செல்லவும் தேவையான சத்துக்களை அளிக்கின்றன. 

அதிக விந்து அணுக்கள் வெளிப்படவும் உதவுகின்றன. மீன், இறைச்சி, பால் பொருட்களில் ஜிங்க் சத்துகள் உள்ளன.

வைட்டமின் E:

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

வைட்டமின் E ஊட்டச்சத்துக்கள் விந்து அணுக்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், நிவர்த்தி செய்ய உதவுகின்றன. அவகேடோவில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. 

இது கருவுறாமை உள்ள ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். நடுத்தர அளவிலான ( 150 கிராம்) அவகேடோ வைட்டமின் ஈ க்கான 21% டிவி அளிக்கிறது.

வைட்டமின் D:

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

வைட்டமின் D விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரிக்க உதவி, கருவுறுதலுக்கு வழி வகுக்கிறது. 

முட்டையின் வெள்ளைக்கரு, எண்ணெய்த் தன்மை நிறைந்த மீன் வகைகள், ரெட் இறைச்சி வகைகளிலும் சூரிய ஒளியிலும் விட்டமின் டி உண்டு.

போலிக் அமிலம்:

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

போலிக் அமில உணவுகள் விந்துகளின் ஆரோக்கியத்தை தரத்தையும் அதிகரிக்கின்றன. போலிக் அமிலம் இலைகளுடன் கூடிய காய்கறிகள், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் உள்ளது.

கேரட்:

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால் கேரட் அதிகமாக சாப்பிட வேண்டும். பாரம்பரிய மருத்துவத்தில் ஆண் மலட்டுத்தன்மைக்கு நீண்ட காலமாக கேரட் பரிந்துரைக்கப்படுகிறது.

மீன் மற்றும் முட்டை:

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் டி நிறைவாக உள்ளன. இவற்றை அடிக்கடிச் சாப்பிட்டு வரலாம். 

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருக்கிறது. இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பைத் தூண்டக்கூடியது. ஆண்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.

விந்தணு அதிகரிக்கும் பூசணிக்காய் விதைகள்:

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

பூசணிக்காய் விதைகள் ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. 

பூசணி விதைகளில் அதிகம் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், விந்து அணுக்களின் நீந்து சக்தி, வடிவம் மற்றும் விந்து அணுக்களின் அளவை சீராக பராமரிக்கிறது. 

செலினியம் சத்துக்கள்:

விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்?  சில டிப்ஸ் !

செலினியம் சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீந்து சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. முட்டை, மீன், இறைச்சி, பிரேசிலியன் நட்ஸ் போன்றவற்றில் செலினியம் உள்ளது.

இதனை தவிர்த்து, உடல் எடையை அதிகரிப்பு, ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல், அதிக மன அழுத்தம் போன்றவை செக்ஸ் வாழ்விற்கு தடையாக அமைகிறது. 

எனவே, மேற் கூறிய வழிமுறைகளை பின்பற்றி இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)