நாம் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாகமல் இப்படி செய்யலாம் !





நாம் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாகமல் இப்படி செய்யலாம் !

0

நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய தேனீர் பேக்குகளை வீணாக கீழே தான் தூக்கி போடுகிறோம். ஆனால் அதனை இனி தூக்கிப் போடாதீங்க.

நாம் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாகமல் இப்படி செய்யலாம் !

அதைப் பயன்படுத்தி வீட்டில் சில அற்புதமான விஷயங்களை செய்யலாம். அதனை தூக்கி வீணாக கீழே போடாமல் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். 

அதிலுள்ள வாசனையானது உங்கள் வீட்டில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை போக்கும். இப்படி வீணாக தூக்கிப்போடும் தேனீர் பேக்குகளை பயன்படுத்தி இது மாதிரியான பல்வேறு விஷயங்களை நாம் செய்யலாம்.

சுறுசுறுப்பாய் இருங்கள்... இதயம் பாதுகாப்பாய் இயங்கும் !

தேனீர் பேக்குகள் கிருமிநாசினி விளைவைக் கொண்டுள்ளது. அதனால் சமையல் பாத்திரங்களை கழுவும் போது நீங்கள் இதனை பயன்படுத்தலாம். 

டீத்தூள் உதவியுடன் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக சுத்தமாகவும் இருக்கும். 

அழுக்கு பாத்திரங்களை தண்ணீரில் ஊற வைத்து அதில் மூன்று டீ பேக்குகளை போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து பிறகு காலையில் கழுவினால் பாத்திரம் சுத்தமாக இருக்கும்.

வாசனை:

நாம் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாகமல் இப்படி செய்யலாம் !

உங்கள் வீட்டில் மழைக்காலங்களில் ஒருவித துர்நாற்றம் வீசும். அதனை நொடியில் போகக்கூடிய தன்மை தேயிலைக்கு உள்ளது. 

குப்பைத்தொட்டி இருக்கக்கூடிய இடத்தில் துர்நாற்றம் வீசினால் அங்கே டீ பேக்குகளை வைக்கலாம். நொடியில் அந்த துர்நாற்றம் உறிஞ்சப்பட்டு சுற்றுப்புறத்தில் புதிய வாசனை பிறக்கும்.

குளியல்:

நாம் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாகமல் இப்படி செய்யலாம் !

நீங்கள் பயன்படுத்திய டீ பேக்குகளை குளிக்கும் நீரில் போட்டு பயன்படுத்தலாம். அதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் உங்கள் சருமத்திற்கு நல்லது. 

மனதிற்கு அமைதியை தரும். அதிலும் குறிப்பாக மல்லிகை நறு மணம் கொண்ட தேநீர் பேக்குகள் நல்ல வாசனையை கொடுக்கும்.

லப் டப்… இதயம் எப்படி இயங்குகிறது?

அரிசி சாதம்:

தினமும் வீட்டில் அரிசி சாதம் சமைக்கும் போது அதில் கூடுதல் சுவையை பெறுவதற்கு நீங்கள் டீ பேக்குகளை பயன்படுத்தலாம். 

அரிசியை வேக வைக்கும் போது தேனீர் பேக்குகளை சேர்த்து அதை கொதிக்க விட வேண்டும். இது சாதத்தில் அதிக சுவையை தரும்.

காலணிகள்:

நாம் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாகமல் இப்படி செய்யலாம் !

மழைக் காலங்களில் அதிகப்படியான ஈரப்பதத்தால் நாம் பயன்படுத்தக்கூடிய ஷுக்களில் துர்நாற்றம் வீசக் கூடும்.

உங்கள் காலனிக்குள் பயன்படுத்திய டீ பேக்குகளை வைப்பதன் மூலம் கெட்ட துர்நாற்றத்தை போக்க முடியும்.

கால்மிதி:

நம் வீட்டில் சில நேரங்களில் பயன்படுத்தும் கால் மிதியடி களில் அதிக துர்நாற்றம் வீசக் கூடும். இதற்கு தேநீர் பேக்குகளை கால் மிதியடிகளில் உள்ளே வைக்கலாம் அல்லது மிதியடிகள் மீது தூவி பயன்படுத்த வேண்டும்.

தாவரங்கள் வளர்ப்பு:

நாம் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாகமல் இப்படி செய்யலாம் !

வீட்டில் சில நேரங்களில் வளர்க்கப்படும் தாவரங்களில் பூச்சி அரிப்பு மற்றும் பூஞ்சை பாதிப்பு உண்டாகும். இதனைத் தவிர்ப்பதற்கு தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து டீ பேக்குகளை பயன்படுத்தினால் போதும். 

தேயிலை தண்ணீரை குளிர வைத்து அதை உட்புற செடிகளுக்கு ஊற்றி பயன்படுத்தி வரலாம்.

பணம் கட்டினால் ஆபரேஷன்... குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா? 

கூந்தல் ஆரோக்கியம்:

கூந்தலில் அதிக எண்ணெய்ப் பிசுக்கு இருந்தால் அதனை நீக்குவதற்கு டீ பேக்குகள் உதவுகின்றன. இதனை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 

பிறகு தலை முடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு தேயிலை தண்ணீரைக் கொண்டு கூந்தலை அலசினால் பளபளப்பாக வைத்திருப்பது அது மட்டுமல்லாமல் கூந்தலுக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

பூச்சிக்கடி:

நாம் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாகமல் இப்படி செய்யலாம் !

நாம் பயன்படுத்திய தேநீர் பைகளை பூச்சி கடிக்கு மருந்தாக பயன்படுத்த முடியும். உடலில் ஏதாவது இடத்தில் தேனி மற்றும் குளவி போன்ற பூச்சி கடித்தால் அவற்றின் கொடுக்கு தோலுக்குள் சிக்கி விடும். 

அந்த இடத்தில் பயன்படுத்திய மற்றும் ஆற வைத்து குளிர்ந்த தேனீர் பேக்குகளை வையுங்கள். அப்படி செய்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் உண்டாகும் அரிப்பு மற்றும் அலர்ஜி போன்றவற்றை தடுக்க முடியும். 

கொரோனாவை எதிர்க்கும் ஆண்டிபாடி.. சூப்பர் ஹியூமன் இம்யூனிட்டி !

மேலும் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலை குறைக்க இது பெரிதும் உதவுகின்றது. எனவே இனி டீ பேக்குகளை வீணாக தூக்கிப் போடாமல் இதுபோன்ற விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)