கறுத்துப்போன கவரிங் நகையை தங்கம் மாதிரி மின்ன செய்ய?





கறுத்துப்போன கவரிங் நகையை தங்கம் மாதிரி மின்ன செய்ய?

2 minute read
0

நீங்கள் போடும் கவரிங் நகை கறுத்து போய் இருந்தால் இந்த முறையில் அதனை பளபளன்னு தங்கம் மாறி மின்ன வச்சிடலாம்.

கறுத்துப்போன கவரிங் நகையை தங்கம் மாதிரி மின்ன செய்ய?

பெரும்பாலானோர் தங்கம் வாங்க கூடிய சூழ்நிலை தற்போது இல்லை என்பதால் கவரிங் நகைகளை வாங்கி அணிவார்கள். 

ஆனால் கவரிங் நகைகள் சிறிது காலத்திற்கு பின் அதன் மஞ்சள் நிறம் மங்கி கறுக்க தொடங்கும். கறுத்த கவரிங் நகைகளை நம்மால் அணிய இயலாது. இதனை அணிவதால் ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படும். 

டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?

இருந்த போதிலும் ஏதும் விஷேசத்திற்கு செல்லும்பட்சத்தில் நாம் கறுத்து போன நகைகளை போட்டு கொண்டு செல்வது சங்கடமாக இருக்கும். 

இது போன்ற சூழ்நிலையில் நாம் எளிமையாக கவரிங் நகைகளை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பளிச்சென்று தங்கம் போல மின்ன வைக்க முடியும்.

அதற்கு முக்கியமாக தேவைப்படும் பொருட்கள் நன்கு புளித்த தயிர், சாம்பல். சாம்பல் உங்களுக்கு எது கிடைக்கிறதோ அதனை எடுத்துக் கொள்ளலாம். 

உதாரணமாக அடுப்பில் இருக்கும் சாம்பலாக இருந்தாலும் சரி, ஊதுபத்தி சாம்பலாக இருந்தாலும் சரி, கம்பியூட்டர் சாம்பிராணியின் சாம்பலாக இருந்தாலும் சரி தான். 

இந்த சாம்பலில் புளித்த தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்களது கறுத்து போன கவரிங் நகைகளில் நன்கு எல்லா இடங்களிலும் படும்படி தடவ வேண்டும். 

டான்சில் கற்களை ஒரே வாரத்துல கரைக்க?

பின்னர், 5 முதல் 10 நிமிடம் காய வைக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரில் நன்கு கழுவி பாருங்கள். உங்களது நகைகள் தங்கம் போல பளபளன்னு மின்னும்.

Tags:
Random Posts Blogger Widget

Post a Comment

0Comments

Post a Comment (0)