கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. 

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

இதில் சீரியல்சை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் இருப்பதால் இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். 

குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் பாதிப்பு போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடலை பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் கடலை மாவில் இனிப்புகள் அதிகள் செய்யப்படுகிறது.

சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி?

கடலைப்பருப்பில் உள்ள சத்துக்கள்

கடலை பருப்பில் புரதம், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C ஆகியவை காணப்படுகின்றன. 

இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 9௦ மில்லியன் டன்கள் கடலை பருப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. 

சில நாடுகளில் கடலை பருப்பை வறுத்து, காபி மற்றும் தேயிலைக்கு பதிலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடலை பருப்பின் செடிகள் மற்றும் இலைகள் நீல சாயம் தயாரிக்க பயன்படுகிறது.

கடலை பருப்பின் ஆரோக்கிய பயன்கள்

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கடலை பருப்பில் எண்ணற்ற உடல் நல ஆரோக்கிய பலன்கள் அடங்கியுள்ளது. அவை என்னென்ன என பின்வரும் பகுதியில் பார்க்கலாம்,

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கடலை பருப்பில் அதிகம் நார் சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை சேரும் தன்மையை குறைகின்றது. 

இதனால் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகின்றது. மேலும் நார் சத்து பசி இன்மையை ஏற்படுத்தும். இதனால் அதிகம் சாப்பிடுவது குறைந்து உடல் பருமன் ஏற்படுவதை தவிர்க்கும்.

சிக்கன் ரைஸ், 27 புரோட்டா, பலூடா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... எங்க தெரியுமா?

கொழுப்பை குறைக்கும்

தினமும் கடலை பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து, சிறிது முளை கட்டியதும், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கடலை பருப்பில் லேக்யுமெஸ் என்னும் பொருள் இருப்பதால், இருதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. 

மேலும் இதில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள், தாது பொருட்கள் மற்றும் நார் சத்து, உடல் ஆரோகியத்தையும், இருதய ஆரோகியத்தையும் மேம்படுத்துகின்றது.

இரத்த அழுத்தத்தை சீர் செய்யும்

கடலை பருப்பில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்ய பயன்படுகின்றது. இதனால் இதயமும் உறுதி அடைகின்றது.

வீக்கத்தை குறைக்கும்

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கடலை பருப்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் இது வீக்கத்தை குறைக்க உதவுகின்றது. 

கடலை பருப்பில் அதிக அளவு செலனியம், பொட்டாசியம், வைட்டமின் A மற்றும் வைட்டமின் B6 நிறைந்துள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகப்படுத்தும்.

சென்னையில் கொசு மருந்தை குடித்து பலியான குழந்தை !

சக்தியை அதிகப்படுத்தும்

கடலை பருப்பில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் அமினோ அமிலம் மேத்யோனைன் என்னும் அணுக்களின் செயல் திறன்களை அதிகப்படுத்தி உடலின் சக்தியை அதிகரிக்கின்றது.

புற்று நோயை தடுக்க்கும்

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

குடல் புற்றுநோயை தடுக்கும் தன்மை கடலை பருப்பிற்கு உள்ளது இதில் இருக்கும் சபோனின்கள் மற்றும் லிக்னான்கள் மற்றும் எதிர்ப்பு ஸ்டார்ச் குறிப்பாக குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.

இரத்த சோகையை போக்கும்

இரத்த சோகை ஏற்பட ஒரு முக்கிய காரணம் இரும்பு சத்து குறைபாடு ஆகும். கடலை பருப்பில் நிறைந்திருக்கும் இரும்பு சத்து, உடலுக்குத் தேவையான ஹீமோக்ளோபின் பெற உதவுகின்றது. இதனால் இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.

எலும்புகளை பலப்படுத்தும்

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கடலை பருப்பில் அதிகளவு கால்சியமும், மக்னீசியமும் நிறைந்துள்ளது. இந்த இரண்டு தாது பொருட்களும், எலும்புகள் நல்ல சத்தை பெறவும், பலமாக இருக்கவும் உதவுகிறது. 

மேலும் இது வைட்டமின் D சத்து உடலில் தங்கவும், அதனால் மேலும் அதிக அளவு கால்சியம் உடலில் சேரவும் உதவுகின்றது.

மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்

இதில் இருக்கும் மக்னீசியம் மற்றும் லேக்யுமேஸ் சிறப்பாக செயல்பட உதவுகின்றது. இந்த தாது பொருட்கள் இரத்த நாங்களை தளரச் செய்து, மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகின்றது.

மேலும் இதில் இருக்கும் விடமின் B சத்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

உடல் எடையை குறைக்கும்

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கடலை பருப்பில் நிறைந்திருக்கும் நார் சத்து மற்றும் புரதமானது, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. 

மேலும் இதில் இருக்கும் கலோரிகளும், உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது.

கூந்தலுக்கு டார்க் பிரவுன் ஹென்னா செய்வது எப்படி?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கடலை பருப்பில் அதிக அளவு வைட்டமின் B6 நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த பெரிதும் உதவுகின்றது. 

மேலும் இதில் இருக்கும் வைட்டமின் A, ஜின்க் மற்றும் லேக்யுமெஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றது.

ஜீரண மண்டலத்தை சீர் செய்கின்றது

கடலை பருப்பின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

கடலை பருப்பில் நார் சத்தும் மற்றும் பிற சத்துக்களும் நிறைந்துள்ளதால், இது ஜீரண அமைப்பை பலப்படுத்தி சீராக செயல் பட உதவுகின்றது. 

இதனால் ஜீரண பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. மேலும் இதில் இருக்கும் நார் சத்து பசியை போக்கி, எப்போதும் நல்ல பலத்தோடு இருக்க உதவுகின்றது.