சுவையான அவல் புளியோதரை செய்வது எப்படி?

சுவையான அவல் புளியோதரை செய்வது எப்படி?

0

வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள். அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். 

சுவையான அவல் புளியோதரை செய்வது எப்படி?

அவல் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவாகும். உடலின் சூட்டைத் தணிக்கும், செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும். 
ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு !

உடல் எடையைக் குறைக்க உதவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும், உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மூளைச் செல்களை புத்துணர்ச்சியாக்கும். ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். 

சரி இனி அவல் கொண்டு சுவையான அவல் புளியோதரை செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !
தேவையான பொருட்கள்

கெட்டி அவல் - 1 கப்,

உப்பு - தேவைக்கு,

புளிக்கரைசல் - 1/2 கப்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

துருவிய வெல்லம் - 1 டீஸ்பூன்.

தாளிக்க

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

வரமிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1,

கறிவேப்பிலை - 6 இதழ்கள்,

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,

வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன். 

காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் !

செய்முறை

சுவையான அவல் புளியோதரை செய்வது எப்படி?

அவலை நன்றாக சுத்தம் செய்து, 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டி பிழிந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும்.  

இடையிடையே திறந்து கைகளால் நன்றாகக் கலந்து விடவும். புளியை ஊறப் போட்டு, 2 டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

தொடர் ஏப்பம் என்ற பாதிப்புக்கு உரிய சிகிச்சை !

ஒரு வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கவும். தாளிப்பு வந்தவுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையையும் போட்டுக் கிளறி 

கரைத்தப் புளி தண்ணீரையும், மஞ்சள் பொடி, உப்பையும் தாளிப்பில் சேர்த்து கொதிக்க விடவும். பெருங்காயத்தையும் போடவும்.

சுமார் 3 நிமிடம் வரை புளித்தண்ணீர் கொதித்ததும், பிழிந்து வைத்திருக்கும் அவலை தாளிப்பில் கொட்டிக் கிளறவும்.

கொதித்து எல்லாம் சேர்ந்து வந்ததும் ஊறிய அவலைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். அவல் புளியோதரை தயார். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)