சுவையான பன்னீர் மசாலா செய்வது எப்படி?





சுவையான பன்னீர் மசாலா செய்வது எப்படி?

0

சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் இருவருமே விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாக பன்னீர் உள்ளது. 

சுவையான பன்னீர் மசாலா செய்வது எப்படி?

பன்னீர் ஒரு ஆரோக்கியமான பால் உணவாகும். தினசரி பனீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமது உடல் ஆரோக்கியமானது மேம்படுகிறது. 

பல சிக்கல்களை கடந்து வெற்றி அடைந்த நடிகர்கள் !

பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி என அனைத்திற்கும் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். 

அதோடு பன்னீரை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான கால்சியம், புரோட்டீன் போன்றவை அதிகம் உள்ளன. 

இத்தகைய பன்னீர் அடிக்கடி உணவில் சேர்ப்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

சரி இனி பன்னீர் கொண்டு சுவையான பன்னீர் மசாலா செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

நீரிழிவு நோய்க்கு மூக்கிரட்டை சாறு... அதிசயம் அற்புதம் !

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

மல்லி தூள் - 2 டீஸ்பூன்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - 1

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

காபாவிற்கு போர்வை போர்த்தி அதை கௌரவப்படுத்திய மன்னன் !

செய்முறை:

சுவையான பன்னீர் மசாலா செய்வது எப்படி?

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.... தெரிந்து கொள்ளுங்கள் !

பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, 

பின் தக்காளி சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 7-8 நிமிடம் வேக வைக்கவும்.

தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அதில் தயிர் சேர்த்து கிளறி, கிரேவி அதிகம் வேண்டுமானால் 

1/2 கப் நீரையும் சேர்த்து, சுவைப்கேற்ப உப்பு தூவி கிளறிவிட்டு வேக வைக்கவும்.

கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறிய !

இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் மசாலா ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)