சுவையான பன்னீர் தோசை செய்வது எப்படி?





சுவையான பன்னீர் தோசை செய்வது எப்படி?

சைவ உணவு உண்பவர்களுக்கு நன்மை பயக்கும் உணவாக பனீர் உள்ளது, ஏனெனில் பனீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. 
சுவையான பன்னீர் தோசை செய்வது எப்படி?

பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது. மேலும், இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. 

இது மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே நன்மை பயக்கிறது.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறும் போது பனீர் உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். 

ஏனெனில் அதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை குறைக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் 

எனில் பனீர் டிக்கா, துருவிய பனீர் என எந்த வடிவிலும் பனீரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

சரி இனி பனீர் கொண்டு சுவையான பனீர் தோசை செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவம் !

தேவையானவை: 

பச்சரிசி - ஒரு கப், 

புழுங்கலரிசி - ஒரு கப், 

துருவிய பனீர் - ஒரு கப், 

பச்சை மிளகாய் - 2, 

உப்பு - தேவைக்கேற்ப, 

பொடியாக அரிந்த கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன், 

எண்ணெய் - தேவையான அளவு.
மார்பக காம்பில் இந்த பிரச்சனை இருந்தால் இத யூஸ் பண்ணுங்க !
செய்முறை:
சுவையான பன்னீர் தோசை செய்வது எப்படி?

பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பனீரை துருவி வைத்துக் கொள்ளவும். 

பச்சை மிளகாயையும் கொத்து மல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 
கர்ப்ப காலத்தில் குடிக்கும் இந்த பானங்கள் பிரசவத்தில் ஏற்படுத்தும் சிக்கல்கள் !
பின்னர் அதனுடன் துருவிய பனீர், பச்சை மிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும். 

சோயாபனீர் சேர்த்தும் செய்யலாம். உடம்புக்கு மிகவும் நல்லது. 

புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்க வைத்து, பிறகு பனீர் சேர்த்துச் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம்.
Tags: