அசத்தலான பூண்டு பொடி செய்வது எப்படி?





அசத்தலான பூண்டு பொடி செய்வது எப்படி?

0

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில்  சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறி விடும். 

அசத்தலான பூண்டு பொடி செய்வது எப்படி?

வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு இந்த பூண்டு மிகச்சிறந்த மருந்தாகும். 

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ  குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக  பாதிக்கப்படும்.  

இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும். 

பூண்டை தனியாக பொடி செய்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். 

கமகமக்கும் கிராமத்து பூண்டு பொடி ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பூண்டு - கால் கப்

தேங்காய் துருவியது - கால் கப்

உப்பு - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - காரத்துக்கு ஏற்ப

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

சுவையான அவல் இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?

செய்முறை :

அசத்தலான பூண்டு பொடி செய்வது எப்படி?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.அடுத்து அதில் காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும்.

அடுப்பை அணைத்து தேங்காய் சேர்த்து கிளறி ஆற விடவும். 

ஆறியதும் மிளகாய் தூள், உப்பு, பூண்டு, தேங்காய் அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது கொரகொரப்பாக அரைக்கவும்.

இப்போது சூப்பரான பூண்டு பொடி ரெடி.

சுவையான கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி?

குறிப்பு :

காற்று புகாமல் பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)