சுவையான பன்னீர் தக்காளி கிரேவி செய்வது எப்படி?





சுவையான பன்னீர் தக்காளி கிரேவி செய்வது எப்படி?

0

பால் பொருட்களில் ஒன்றான பன்னீரில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பெரும்பாலானோருக்கு பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் பிடிக்கும்.

சுவையான பன்னீர் தக்காளி கிரேவி செய்வது எப்படி?

அத்தகையவர்களுக்கு ஒரு அருமையான பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அதனை மதிய வேளையில் செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். 

தினமும் கடற்கரைக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள் !

மேலும் இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்து பார்க்கலாம். அந்த அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.

இந்த ரெசிபிக்கு பன்னீர் தக்காளி கிரேவி என்று பெயர். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

வெங்காயம் - 2 (நறுக்கியது)

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

தக்காளி - 2 (நறுக்கியது)

பிரியாணி இலை - 1

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 1 டீஸ்பூனி

உப்பு - தேவையான அளவு

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள் !

செய்முறை:

சுவையான பன்னீர் தக்காளி கிரேவி செய்வது எப்படி?

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு 

வாசனை திரவியம் கண்களில் பட்டால் என்ன நடக்கும்?

5-10 நிமிடம் பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். 

அதே சமயத்தில் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, வெங்காய பேஸ்ட் பொன்னிறமாகும் வரை வதக்கி, 

சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி?

அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தக்காளி சாஸ் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து தீயை அதிகரித்து, 

2-3 நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான பன்னீர் தக்காளி கிரேவி ரெடி !

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)