டேஸ்டியான சத்து நிறைந்த மட்டன் ரசம் செய்வது எப்படி?





டேஸ்டியான சத்து நிறைந்த மட்டன் ரசம் செய்வது எப்படி?

0

விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட நேரம் கிடைக்கும். 

டேஸ்டியான சத்து நிறைந்த மட்டன் ரசம் செய்வது எப்படி?

அதிலும் நீங்கள் அசைவ பிரியர் என்றால், பல வித்தியாசமான அசைவ ரெசிபிக்களை வீட்டிலேயே செய்து சுவைக்கலாம். 

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

சுகாதாரமான நல்ல இறைச்சி வாங்குவது எப்படி ?

எனவே, கர்ப்பிணிகள் மட்டனைச் சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

கிராமத்தில் பொதுவாக மட்டனை கறி என்றுதான் கூறுவார்கள். கறி குழம்பு, கறி வறுவல் செய்வதை விட கறி ரசம் தான் அதிகமாக செய்வார்கள். 

ஏனென்றால் அது குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் மிகவும் உகந்த உணவாக இருக்கும். அதனால் கறி ரசம் தான் செய்து கொடுப்பார்கள்.

சரி இனி மட்டன் கொண்டு மட்டன் ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

தோல் அழற்சி மற்றும் அறிகுறிகளும் காரணங்களும்? #Eczema

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தக்காளி - 1

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

மிளகு - 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 4 (தோலுரித்து நறுக்கியது)

சீரகம் - 1 டீஸ்பூன்

பூண்டு - 6 பல்

இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

செய்முறை:

டேஸ்டியான சத்து நிறைந்த மட்டன் ரசம் செய்வது எப்படி?

முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதை குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 

உறவின் போது ஆண்களுக்கு வெறுப்பை தரும் பெண்களின் இந்த செயல்கள் !

குக்கரை மூடி 10 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் உள்ள மட்டன் நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

(மட்டன் துண்டுகளைக் கொண்டு மட்டன் வறுவல் செய்து கொள்ளலாம்.)

பின்னர் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ளதை சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

அடுத்து, மட்டன் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு, மேலே கொத்த மல்லியைத் தூவினால், மட்டன் ரசம் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)