காளான் பட்டாணிக் குழம்பு செய்வது எப்படி?





காளான் பட்டாணிக் குழம்பு செய்வது எப்படி?

0

வாரத்தின் எல்லா நாள்களும் வீட்டிலுள்ளவர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கேற்றபடி சமைத்து, பிடிக்கிறதோ இல்லையோ, 

காளான் பட்டாணிக் குழம்பு செய்வது எப்படி?
அதையே தானும் சாப்பிட்டு ஓடிக்கொண்டிருப்பவர்கள் பெண்கள். என்றாவது ஒரு நாள் வீட்டில் சமையல் வேலை இல்லை என்றால் 

தன் ஒருத்திக்காக சமைப்பதா என நினைத்து கிச்சனுக்கு விடுமுறை விடும் பெண்களே அதிகம்.

அந்த ஒரு நாளாவது தனக்குப் பிடித்தவற்றை எல்லாம் செய்து சாப்பிட நினைக்கும் பெண்கள் அரிதினும் அரிது. 

காய்கறி பிடிக்காத குழந்தைகள், எண்ணெய் இல்லாத சமையல் கேட்கும் மாமனார், மாமியார், டயட் மெனு சொல்லும் கணவர்... இப்படி தினசரி சமையலில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

இவை எல்லாவற்றுக்கும் ஓய்வு கொடுத்து விட்டு இந்த வாரம் முழுக்க முழுக்க கட்டுப்பாடுகளற்ற மெனுவை பிளான் செய்து திகட்டத் திகட்ட சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையானவை:

காளான் - ஒரு பாக்கெட்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 2 (நறுக்கியது)

கடுகு - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி - 50 கிராம்

பெரிய வெங்காயம் - அரை வெங்காயம் (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3

தனியாத்தூள் - 3 டீஸ்பூன்

மட்டன் மசாலா பவுடர் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு

செய்முறை:

காளான் பட்டாணிக் குழம்பு செய்வது எப்படி?

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

அடுத்து, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை, வதக்கவும். 

அடுத்து, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, காளான் மற்றும் பச்சைப் பட்டாணி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். 

தொடர்ந்து, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், மட்டன் மசாலா, தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி... ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும். 

பிறகு, உப்பு சரி பார்த்து, துருவிய தேங்காயைச் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு, தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)