பேபி பீட்சா தோசை செய்வது எப்படி?





பேபி பீட்சா தோசை செய்வது எப்படி?

0

மீண்டும் பள்ளி, கல்லூரிகள், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திறக்கப்பட்டு விட்டது.

பேபி பீட்சா தோசை செய்வது எப்படி?
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்... பவுர்ணமி நிலா சைஸ் ஹாட்பேக்.... அதில் சின்ன சின்ன பிஸ்கட்கள்... 
குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்

இதோடு முதுகை ஒருவழியாக்கும் பாடப்புத்தகங்கள்... என குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று 

நினைக்க கூடாது. சாப்பிட கொடுத்து விடப்படும் உணவு சத்தானதா, உடலுக்கு நல்லதா என்பதை யெல்லாம் பற்றி சிந்திக்காமல், 

வயிற்றை நிரப்பினால் சரி என்று பல பெற்றோர், கண்டதையும் கொடுத்து விடுகின்றனர். 

நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !

இந்நிலையில், இன்னிக்கும் அதே மெனுவா என அலுத்துக் கொள்ளும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க புதுப்புது ரெசிப்பிகளை முயற்சி செய்து பாருங்களேன்...

தேவையானவை:

தோசை மாவு - அரை கிலோ

பேபி கார்ன் - அரை கப்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

மூன்று கலர் குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

துருவிய மொசரெல்லா சீஸ் - சிறிதளவு

சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்

ஓரிகானோ - ஒரு டீஸ்பூன்

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்

செய்முறை:

பேபி பீட்சா தோசை செய்வது எப்படி?

பேபி கார்னை வேகவைத்து மெல்லிய வட்டமாக நறுக்கி வைக்கவும். தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தி, சிம்மில் வைக்கவும். 

ஒரு சின்ன கரண்டி தோசை மாவெடுத்து, உள்ளங்கை அளவிலான ஊத்தப்பமாகத் தோசைக்கல்லில் ஊற்றவும். 

மாவு வேகும் முன் அதன் மேல் வெங்காயம், பேபி கார்ன் ஸ்லைஸ்கள், குடமிளகாயை வைக்கவும். 

தோசையைத் திருப்பிப் போட்டு அதைச் சுற்றி ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும். 

இதை அப்படியே பிளேட்டுக்கு மாற்றவும். இனி தோசையின் மேல் சீஸ் தூவி அது உருகும் நேரத்தில், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோவைச் சேர்க்கவும். 
இதயத்தை பாதுகாப்பது எப்படி?

இதை 2 நிமிடம் கழித்து லஞ்ச் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து விடவும். மதியம், ஆனந்தமாகச் சுவைத்து மகிழ்வார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)