ஸ்பெஷல் சேமியா கட்லெட் செய்வது எப்படி?





ஸ்பெஷல் சேமியா கட்லெட் செய்வது எப்படி?

0

தேவையானவை: 

மரவள்ளிக்கிழங்கு சேமியா - ஒரு கப், 

கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப், 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், 

பச்சை மிளகாய் - 5, 

சோம்பு - ஒரு டீஸ்பூன், 

இஞ்சி - ஒரு துண்டு, 

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, 

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
ஸ்பெஷல் சேமியா கட்லெட் செய்வது எப்படி?

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அதில் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். 

சேமியாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையில் சேர்த்துப் பிசையவும்.

வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, சோம்புடன் சேர்த்து மாவில் கலந்து விரும்பிய வடிவில் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)