ஹாட் அன்ட் சோர் சிக்கன் சூப் செய்வது எப்படி?





ஹாட் அன்ட் சோர் சிக்கன் சூப் செய்வது எப்படி?

0

வீட்டில் உள்ளவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் போது நாம் சூப் போன்றவை செய்து பருகினால் கொஞ்சம் ரீலீஃப் கிடைக்கும்.

ஹாட் அன்ட் சோர் சிக்கன் சூப் செய்வது எப்படி?

சூப்பில் மட்டன் சூப், சிக்கன் சூப், வெஜ் சூப், மஷ்ரூம் சூப், கார்ன் சூப் என்று பல விதமான சூப்களை செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவையாக இருக்கும். 

அந்த வகையில் இன்று நாம் சிக்கன் சூப் காண உள்ளோம். இந்த சிக்கன் சூப்பினை செட்டிநாடு ஸ்டைலில் செய்ய உள்ளதால் இதன் சுவை சற்று தூக்கலாக இருக்கும். 

இதனை ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். இதனை செய்யும் போதே வீட்டில் உள்ள அனைவரும் எப்போது அருந்த கொடுப்பீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் மணம் இருக்கும். 

வாருங்கள்! தொண்டைக்கு இதம் அளிக்கும் செட்டிநாடு சிக்கன் சூப்பினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

கோழிக்கறி - 100 கிராம்

மிளகாய்த்தூள் -   1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய மா இஞ்சி - 1 மேஜைக் கரண்டி

நறுக்கிய லெமன் க்ராஸ் - 1 மேஜைக் கரண்டி

நறுக்கிய நார்த்தங்காய் இலை - 1 மேஜைக் கரண்டி

சிகப்பு மிளகாய் -  3

நறுக்கிய ஸிலேரி - 1 மேஜைக் கரண்டி

கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) - 2 கப்

கொத்தமல்லி இலை - 1 மேஜைக் கரண்டி

ஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) - 3 மேஜைக் கரண்டி

எலுமிச்சைச்சாறு - 2 மேஜைக் கரண்டி

செய்முறை : 

கோழிக்கறியை மிக மெல்லிய, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் கோழிக்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும். கொதித்ததும் கோழிக்கறி துண்டுகளை போட்டு வேக வைக்கவும்.

அதன் பின், மா இஞ்சி, லெமன் க்ராஸ், நார்த்தங்காய் இலை, ஸிலேரி, மிளகாய்த்தூள் இவற்றை சேர்க்கவும்.

3 நிமிடங்கள் ஆனபின் ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி, இறக்கி சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)