இந்தியன் ஸ்டைல் பூண்டு நூடுல்ஸ் செய்வது எப்படி?

இந்தியன் ஸ்டைல் பூண்டு நூடுல்ஸ் செய்வது எப்படி?

0

மேகி நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாகும்! 

இந்தியன் ஸ்டைல் பூண்டு நூடுல்ஸ் செய்வது எப்படி?
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பாகவும் இதை சொல்லலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! 

நேரம் கிடைக்காத அளவு கடினமாக உழைப்பதால் சமையலறையில் நுழைவதற்கு கூட நேரம் கிடைக்காதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மதிய வேளையில் சாதம் கொடுத்து அனுப்பினால், சாப்பிடாமல் அப்படியே கொண்டு வரும் 

குழந்தைகளுக்கு மதிய வேளையில் சாப்பிடுமாறு, அவர்களுக்கு நூடுல்ஸ் செய்து கொடுத்தால், டிபன் பாக்ஸ் காலியாகத் தான் வரும். 

இத்தகைய நூடுல்ஸை பலவாறு சமைக்கலாம். இங்கு அதில் ஒரு வகையான இந்தியன் ஸ்டைல் பூண்டு நூடுல்ஸ் எப்படி செய்வது? என்று பார்ப்போம்..

பெண்களுக்கு 'அந்த' இடத்தில் துர் நாற்றம் நீங்க?

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 1 பாக்கெட்

பூண்டு - 10 பற்கள்

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)

வெங்காயம் - 2 (நறுக்கியது)

கேரட் - 1 (நறுக்கியது)

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

அதிகரித்து வரும் சிசேரியன் தேவை தானா?

செய்முறை:

இந்தியன் ஸ்டைல் பூண்டு நூடுல்ஸ் செய்வது எப்படி?

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், 

நூடுல்ஸை போட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி, 

கேமராவில் மட்டும் ஆவிகள் சிக்குவது ஏன்?

நீரை வடித்து விட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் தூள், வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு சேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
தங்கம் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரிய !

பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூண்டு நூடுல்ஸ் ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)