ஜூஸ் கடைக்கு போறீங்களா? இதை கவனிங்க !





ஜூஸ் கடைக்கு போறீங்களா? இதை கவனிங்க !

0
வெயில் காலம் வந்து விட்டாலே ஜூஸ் கடைகளுக்குக் குளுகுளு லாபம் தான். அதே சமயம் வாடிக்கை யாளர்களின் ஆரோக்கியத்தை எண்ணி சுகாதாரத்தைப் பின்பற்றுவது அவசியம்.
ஜூஸ் கடைக்கு போறீங்களா?
சமீபத்தில் ரயில்வேயில் உள்ள ஜூஸ் கடையில் கழிவறை நீர் பயன்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. நீங்கள் கடைகளில் வாங்கி குடிக்கும் ஜூஸ் சுகாதாரமானது தானா? எப்படி அறிந்து கொள்வது?

நீங்கள் செல்லும் ஜுஸ் கடையில் உங்கள் கண் முன்னே ஜூஸ் போடுகி றார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். 
அவர்கள் தரும் கிளாஸ் கண்ணாடி அல்லது ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் கிளாஸுக ளாக இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், ஜார், மிக்ஸி, கத்தி சுத்தமானதா, தரமானதா என்பதைக் கவனியுங்கள்.

காய்கறிகள் பழங்கள் ஃப்ரெஷானதா, குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருக்கி றார்களா என்பதைக் கண்டறியவும். 

ஐஸ் கட்டிகளை தெர்மாகோலில் வைப்பது உடலுக்குக் கேடு என சுகாதார அமைச்சகத் தால் தடை செய்யப் பட்டது. எனவே அதில் பயன்படுத்து கிறார்களா என்பதைக் கவனியுங்கள்.
ஐஸ் கட்டிகளை அவர்கள் பயன்படுத்தும் போது அவர்களின் கை சுத்தமாக உள்ளதா, அந்த கடைக்காரர் சுத்தமாக இருக்கிறாரா என்பதைக் கவனியுங்கள்.

பயன் படுத்தப்படும் நீர் சுத்தமானதா எங்கிருந்து வாங்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பயன்படுத்தப்படும் பால் புதியதா, ஃபிரீசரில் வைக்கப் பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.

அவர்கள் பயன்படுத்தும் ஃபிரிஜ் மற்றும் ஃப்ரீஸர் சுத்தமாக இருக்கிறதா, அடிக்கடி சுத்தம் செய்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அழுகிய பழங்கள், தேவையற்ற கழிவுகளைச் சரியான முறையில் அடிக்கடி அப்புறப் படுத்துகிறார்களா அல்லது அவை அப்படியே தேக்கி வைக்கப்பட்டு ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக் கின்றனவா என்பதைக் கவனியுங்கள். 
பழங்களை உடனடியாகப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைட் பயன்படுத்தி ஜூஸ் போடுகிறார்களா என்பதைக் கவனியுங்கள். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ரா, கப் போன்றவை பயன்படுத்து கிறார்களா என்பதைக் கவனியுங்கள்.

அந்த கடையில் வேலை பார்ப்பவர்கள் ஆரோக்கிய மானவர் என்பதற்கான மருத்துவ சான்றிதழ் களை வைத்திருக்க வேண்டும். 

மேலே குறிப்பிட்ட அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அளித்த கடைக்கான உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அதை நுகர்வோர் கேட்கும் போது காண்பிக்க வேண்டியது கடைக் காரர்களின் கடமை. 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)