சுவையான மிளகாய் குழம்பு செய்வது எப்படி?





சுவையான மிளகாய் குழம்பு செய்வது எப்படி?

0

குழம்பு என்பது, இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மற்றும் இலங்கை நாடுகளில் சமைக்கப்படும் பொதுவான உணவுப் பொருளாகும். 

சுவையான மிளகாய் குழம்பு செய்வது எப்படி?

இது பெரும்பாலும் புளித்தண்ணீர், மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. சில சமயங்களில் பருப்பு பயன்படுத்தப்படுகிறது.

தேவையானவை :

பச்சை மிளகாய் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 200 கிராம்

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

புளி - 1 எலுமிச்சை அளவு

கடுகு - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்

கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க !

செய்முறை :

மிளகாயை வட்ட வடிவமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

நுங்கு சாப்பிடுவதால் நன்மைகள் !

நன்றாக வதங்கிய பின், புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கிளறவும்.

மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும். ஊறுகாய் போல் பயன்படுத்துவதற்கு ஏற்றது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)