கலவை காய்கறி ஊறுகாய் செய்வது எப்படி?

கலவை காய்கறி ஊறுகாய் செய்வது எப்படி?

0

ஊறுகாய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதை குறிக்கிறது. ஏனெனில் அவை குடலுக்கு மிகச் சிறந்தவை. ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். 

கலவை காய்கறி ஊறுகாய் செய்வது எப்படி?
இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் உலகின் எந்தஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம், 

உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இருக்காது என்று சொல்வார்கள். 

உண்மையில், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான உணவு கலாச்சாரங்கள் உபரி பயிர்களை ஊறுகாய்களாக தயார் செய்து உற்பத்தி செய்கின்றன. 

மசாலாப் பொருள்களைச் சேர்ப்பதால் ஊறுகாயில் நுண்ணூட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் மேம்படுகின்றன. 

மேலும் அவற்றை சிறிய அளவில் எடுத்துக் கொண்டால் கூட ஒருவருக்கு ஊட்டச்சத்து அடர்த்தியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

துபாயில் 43 வருடம் விடுப்பு எடுக்காத போலீஸ் அதிகாரி !
தேவையானவை :

மாங்காய் - 1

கேரட் - 1

பச்சை பட்டாணி - 50 கிராம்

இஞ்சி -  2 அங்குலம்

பச்சை மிளகாய் - 4

முருங்கைப்பிஞ்சு - 2

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சம்பழம் -  4

கொத்தவரங்காய் - 10

கடுகு - 2 தேக்கரண்டி

பூண்டு -  10 பல்

பீன்ஸ் -   10

வெந்தயம் - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் -  அரை தேக்கரண்டி

உப்பு -  தேவையான அளவு

ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !

செய்முறை :

கலவை காய்கறி ஊறுகாய் செய்வது எப்படி?
மாங்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூண்டு, இஞ்சி, 2 எலுமிச்சம்பழம், முருங்கைப்பிஞ்சு, பச்சை மிளகாய், இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைப் பட்டாணியுடன் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, மீதமுள்ள எலுமிச்சையின் சாற்றைப் பிழிந்து விடவும்.

நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா? இந்த கனியை சாப்பிடுங்கள் !

தேவையான உப்புத்தூள், மஞ்சள்தூள் போட்டுக் கலந்து ஊற விடவும். 4 அல்லது 5 நாட்கள் ஊற வேண்டும்.

அதன்பின் கடுகு, பெருங்காயத்தூளை வறுத்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.

தூளாக்கிய பொருட்கள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் போட்டுக் கலந்து, கிளறி விடவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு போட்டுத் தாளித்து, காய்கறி கலவையுடன் சேர்த்து, 

உண்ணும் உணவு ஜீரணமாக? வீட்டிலேயே மருந்து !

நன்றாகக் கிளறி பாட்டில்களில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)