ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி?





ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி?

0

சிக்கனில்  அதிக அளவு புரதங்கள் உள்ளது. இது  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கு  முக்கிய பங்கு வகிக்கிறது. 

ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி?
மேலும்  தசைகளை வலுவடை  செய்யும், பசியை தூண்டும், மற்றும்  இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது .இப்படி எண்ணில் அடங்கா நன்மைகளை கொண்டுளள்து இந்த  சிக்கன். 

கோழியைத் தோலுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு சென்றடையும் கலோரிகளின் எண்ணிக்கை 386 ஆக இருக்கும். 50 சதவீத கலோரிகள் புரதங்களிலிருந்தும், 50 சதவீதம் கொழுப்புகளிலிருந்தும் வருகிறது.

கூடுதல் கலோரிகள் மற்றும் கொழுப்பைச் சேர்க்க விரும்பவில்லை என்றால், சாப்பிடுவதற்கு முன் கோழியின் தோலை அகற்றுவது நல்லது.

உயரத்துக்கு ஏற்ற உடல் ஆரோக்கியம், உடல் உழைப்பு உள்ளவர்கள் சமைக்கும் போது கோழியின் தோலை அப்படியே விட்டு விட்டு, சாப்பிடும் முன் தோலை நீக்கலாம். 

சிறு நீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !

ஏனென்றால், சமைக்கும் போது கோழித் தோல் இருப்பதால், கறிக்கு சரியான சுவையும், பதமும் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.காரசாரமான  உணவுகள்  என்றால் அது ஆந்திரா உணவுகள் தாங்க. 

ஆந்திரா உணவு என்றாலே ஹைதராபாத் பிரியாணி தான் முதலில் சொல்லுவோம். பிரியாணிக்கு சூப்பரான  ஸ்டார்டர்  மற்றும் காம்பினேஷன்ன்னா அது சிக்கன் தானே.  

வாங்க இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையானவை:

சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் – 4

காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் சாஸ் – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)

எண்ணெய் – 2 டீஸ்பூன்

நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

அனைவரும் விரும்பும் லட்சா பரோட்டா செய்வது எப்படி?

செய்முறை:

ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி?

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பிறகு சிக்கன் துண்டுகள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சிக்கனை வேக விடவும். 

மைதாவில் கலக்கப்படும் பென்சாயில் பெராக்சைடு நன்மையும் தீமையும் ! 

சிக்கன் மிருதுவாக வெந்த பிறகு பச்சை மிளகாய் சாஸ், நறுக்கிய கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)