சுவையான கொத்தவரங்காய் மசாலா செய்வது எப்படி?

சுவையான கொத்தவரங்காய் மசாலா செய்வது எப்படி?

0

கொத்தவரங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை. 

கொத்தவரங்காய் மசாலா செய்வது எப்படி?
கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமி நாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், 

கட்டிகளைக் கரைப்பானாகவும் புண்களை ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தன்மைகளைப் பெற்றுள்ளன.

உணவில் கொத்தவரங்காயை சேர்த்து கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது. இப்போது சத்து நிறைந்த கொத்தவரங்காய் மசாலா எப்படி செய்வது? என்று பார்ப்பொம்.

தேவையான பொருட்கள் :-

நறுக்கிய கொத்தவரங்காய் – கால் கிலோ

மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

சர்க்கரை – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 1 கப்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :-

கொத்தவரங்காயை காய் முழுகும் வரை தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் அவற்றுடன் கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய் தூள், வேர்க்கடலை தூள், தேங்காய், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். 

நன்றாக வெந்தவுடன் இறக்கவும். இப்போது சுவையான கொத்தவரங்காய் மசாலா தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)