நாம் உண்பது உண்மையில் ஓட்ஸ் தானா? மறைக்கப்பட்ட உண்மை !





நாம் உண்பது உண்மையில் ஓட்ஸ் தானா? மறைக்கப்பட்ட உண்மை !

0

இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகி விட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள், உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் அன்றாட உணவாகி விட்டது.   

நாம் உண்பது உண்மையில் ஓட்ஸ் தானா? மறைக்கப்பட்ட உண்மை !
வேகமாக ஓடும் உலகில் காலை உணவை தவிர்ப்பதை காரணம் காட்டி பல ரெடி டு ஈட் உணவுகள் நுழைந்து விட்டன. 

கார்ன் ஃப்ளேக்ஸ், கப் நூடுல்ஸ், பாதி சமைத்த உணவுகளாக மாறி விட்டது. அதிலும் சத்து, எடை குறைப்பு என்ற பெயரில் நம் ஊர் உணவையே மறந்து விட்டோம். 

அதிகம் வேலை வைக்காமல் எளிதாக செய்து விட முடியும் என்பதால் காலை உணவுக்கு பலரின் சாய்ஸ் ஓட்ஸ் தான். 

ஓட்ஸ் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஓட்ஸில் உள்ள அதிக நார்ச்சத்து, தாவர வேதிப்பொருட்கள் (PHYTOCHEMICALS) உள்ளிட்டவை, 

நன்கு சாப்பிட்ட பிறகும் பசியுடன் இருப்பதற்கான சில காரணங்கள் !

மனிதர்களின் உடல்நலனுக்கு ஏற்றவைகளாக உள்ளது மட்டுமல்லாது, ஓட்ஸை எளிதில் சமைக்க கூடியதாக உள்ளது. 

ஓட்ஸில் உள்ள அதிக நார்ச்சத்து

சிறிது காலம் முன்பு வரை, அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்த ஓட்ஸ், இன்று அனைத்து டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும், பல்வேறு வெரைட்டிகளுடன் நிறைந்து இருக்கின்றன.
மாரடைப்பை கண்டறிவது எப்படி?

ஓட்ஸ் தாவரத்தின் பெரும்பகுதி விலங்குகளுக்கு உணவாகவும், சிறிய பகுதி மட்டுமே, மனிதர்கள் உட்கொள்ள பயன்படுத்தப்பட்டு வந்தது.

Avena Sativa என்ற தாவரத்தில் இருந்து விளைவிக்கப்படும் உணவுப் பொருளே ஓட்ஸ் ஆகும். 

மற்ற பயிர்களை ஒப்பிடும் போது, குறைந்த அளவு தண்ணீர், குறைவான அளவிற்கே உரங்களே, ஓட்ஸ் பயிரிட போதுமானதாக உள்ளது. 

ஈரப்பதம் நிறைந்த, குளிர்ச்சியான பகுதிகளில் ஓட்ஸ் அதிகளவில் விளைவிக்கப் படுகிறது. ஓட்ஸ், அமெரிக்கா மட்டுமல்லாது, 

பிரஸர், உப்பு, பொட்டாசியம் !

ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, கனடா, போலந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. 

தாவரத்தில் இருந்து விளைவிக்கப்படும் உணவுப் பொருளே ஓட்ஸ்

அதை இங்கே இறக்குமதி செய்து அதன் நன்மைகளை விளம்பரம் மூலம் பிரபலப்படுத்தி விட்டனர்.
நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம் !

இதன் விளம்பரங்களை கண்டு நாமும் சமையல் அறையில் அதற்கு ஓர் இடத்தை கொடுத்து விட்டோம். 

ஓட்ஸ்' என்பது அரிசியைப் போல ஒரு தானியமே. ஆனால், அரிசியைப் போல இல்லாமல் கஞ்சி, களி மட்டும் தயாரிக்க முடியும். 

ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். 

இது உடல் ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயம். எடை குறைப்புக்கு ஓட்ஸை உட்கொள்வது நல்லது தான். ஆனால் அது விரைவில் செரிமானம் ஆவதால், சீக்கிரமே பசியெடுக்கும். 

எனவே மறுபடியும் சாப்பிட வேண்டியிருப்பதால் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும்.   

நம் உடலில் நீர்சத்து குறைபாடு என்றால் என்ன?

ஓட்ஸ் சுவை இல்லாததால் சர்க்கரை, ஸ்ட்ராபெரி, வாழை என ஃப்ளேவர்களை சேர்த்து விட்டனர். 

ஓட்ஸ் விரைவில் செரிமானம் ஆவதால், சீக்கிரமே பசியெடுக்கும்

சுவைக்காகப் பல விஷயங்களை அதிகமாக ஓட்ஸோடு சேர்த்தால், ஓட்ஸின் பயன் முழுமையாக உடம்புக்குக் கிடைக்காது. 

அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர்  ராகி, கம்பு, சோளம், திணை, வரகு, சாமை எல்லாம் பல மடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு. 

புதினா கீரையும் அதன் மருத்துவ குணங்களும் !

நம் ஊரிலேயே விளைவதால் நவதானியங்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. 

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாவதால் ஓட்ஸ் மேல் நமக்கு பெரிய கவர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நாமோ நம் பருவநிலைக் கேற்ற சீரான உணவு விட்டு விட்டோம். 

நாம் உண்பது உண்மையில் ஓட்ஸ் தானா?

நாம் உண்பது உண்மையில் ஓட்ஸ் தானா?

உண்மையில், ஓட்ஸில் சத்துகள் இருக்கிறது தான். ஆனால், நமக்கு இங்கு கிடைக்கின்ற ‘ஓட்ஸில், ஒன்றும் இல்லை’ என்பது தான் மறைக்கப்பட்ட உண்மை. 

நமக்கு வருவதெல்லாம், ‘ஓட்ஸ் அவல்’ மட்டுமே. ஓட்ஸை 100 டிகிரியில் வேக வைத்து, 80-100 டன் இயந்திரந்தில் இடித்து, தட்டையாக்கி, 

இஞ்சியின் மருத்துவ குணம் !

200 டிகிரியில் அதில் உள்ள திரவத்தை எடுத்த பின், வெளி வருகின்ற சக்கையை, 6 மாதம் கெட்டுப் போகாமல் இருக்க சோடியம் நைட்ரேட், சோடியம் பென்ஸோயேட், 

சுவைக்காக மோனோ சோடியம் குளுட்டமேட், காற்றில் உள்ள ஈரத்தை ஓட்ஸ் உறிந்து நமத்து விடக்கூடாது என்பதற்காக 

ஓட்ஸில் சத்துகள் இருக்கிறது தான். ஆனால்

‘சிலிக்கேட்’ உப்பு போன்ற பதப்படுத்திகள் சேர்க்கப்பட்டு அழகான கவர்களிலும் அட்டைப் பெட்டிகளிலும் விற்கப்படுகிறது. 

இப்படித் தான் ஓட்ஸூம் கார்ன் ஃபிளேக்ஸூம் தயாரிக்கப்பட்டு நம் தட்டுக்கு வருகின்றன. 

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

இப்படிப்பட்ட சக்கையை தான் நமக்கு ஓட்ஸ் என்று விற்கிறார்கள். இதை சாப்பிடுவதால் வயிற்றுப் புண்கள் வரலாம். மிக மோசமான நிலையில், புற்றுநோய் கூட வர வாய்ப்பிருக்கிறது.  

எது எப்படியோ எப்பவும் வீட்டில் எண்ணெய் இல்லாமல் ஃப்ரெஷாக செய்யப்படும் இட்லிக்கு இணை எதுவுமில்லை. அவற்றில் கிடைக்கும் சத்துக்கள் வேறு எதுவுமில்லை. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)