உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பல வழிமுறைகளை மேற்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சிப்பார்கள். 
ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது
அப்படி உடல் எடையை வேகமாக குறைக்க உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு அற்புதமான டயட் முறை தான் இந்த ஓட்ஸ் டயட்.  
இதன் மூலம் உங்கள் உடல் எடையை நீங்கள் குறைக்க முடியும். ஓட்ஸ் உலகம் முழுவதும் பலராலும் அதிகம் உண்ணப்படும் பிரபலமான காலை உணவு. 

ஏனென்றால் இது காலையில் சமைக்க எளிதானது மேலும் பல வழிமுறைகளில் இதை சமைத்து சாப்பிடலாம். 

நீங்கள் இதை ஜூஸ், மில்க் ஷேக், கஞ்சி போன்று பல வழிகளில் பயன்படுத்தலாம். டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஓட்சை இப்படியும் செய்து சாப்பிடலாம். 

சரி ஓட்ஸ் முட்டை கொண்டு உடல் எடை குறைக்க ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 3 கப் கோதுமை மாவு - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து 

தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

பிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். 
பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் டயட் ரொட்டி தயார்.