கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி?

கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிகவும் பிரபலம். பத்தாண்டுகளுக்கு முன்பு கிலோ பதினைந்து ரூபாய்க்கு விற்ற மீன் இப்போது கிலோ 400 ரூபாய்க்கு விற்கிறது. அந்த அளவுக்கு மத்தி மீனுக்கு இப்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு
காரணம் இதில் நிறைந்துள்ள அபரிமிதமான புரதச்சத்தும், ஒமேகா 3 அமில கொழுப்பும்தான். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த ஊட்டச் சத்துகளாகும்.

இருபதாண்டுகளுக்கு முன் இந்த மீனை மீனவர்கள் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அல்லது உரத்துக்கு அனுப்பிவிடுவர்.
இப்போது மருத்துவ உலகம் மத்தி மீனில் உள்ள அத்தியாவசிய சத்துக்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளதால் இதன் விலை இப்போது சக்கை போடு போடுகிறது. 

தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

மத்தி மீனை உண்பதால் கண், இதயம், நீரிழிவு, எலும்பு மற்றும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்மை அடையும்.இன்று சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருள்கள் : 

மத்தி மீன் – 1/2 கிலோ 

கறி மசாலா – 1 


தக்காளி – 3 

பச்சை மிளகாய் -2 

மிளகாய் தூள் -2 ஸ்பூன் 

மல்லி தூள் -1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் 

சோம்பு -1 1 /2 ஸ்பூன் 

புளி – எலுமிச்சை அளவு 

தேங்காய் – 1 /2 மூடி 

உப்பு – தேவையான அளவு 

எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை : 
மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிமசாலா போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். 

தக்காளி நன்றாக வதங்கியதும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். 

குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போனவும் இறக்கவும். 

சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு ரெடி.
Tags: