சுவையான டொமேட்டோ சாஸ் செய்வது எப்படி?





சுவையான டொமேட்டோ சாஸ் செய்வது எப்படி?

0

பிரைடு ரைஸ், நூடுல்ஸ் செய்யும் போது தக்காளி சாஸ் தேவைப்படும். தக்காளி சாஸ் (  tomato sauce ) னை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான டொமேட்டோ சாஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

இந்த உருளைக்கிழங்கு சாறு குடித்தால் எந்த நோயும் வராது... குடிச்சி தான் பாருங்களேன் !

தக்காளி - ஒரு கிலோ

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

பூண்டு - 3 பல்

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

பட்டை - சிறிதளவு

கிராம்பு - சிறிதளவு

உப்பு - அரை டீஸ்பூன்

இஞ்சி - சிறு துண்டு

எலுமிச்சைப்பழச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

வீட்டிலேயே எளிமையாக பால் பவுடர் செய்வது எப்படி?

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நல்ல கெட்டியான தக்காளியாக வாங்கிக் கொள்ளவும். அப்போது தான் சாஸ் கெட்டியாக நன்றாக இருக்கும். 

பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு,  பட்டை, கிராம்பு சேர்த்து அடுப்பை மூடி 2 விசில் சத்தம் வரை வேக விடவும். 

வெந்தவுடன் அடுப்பை திறந்து தக்காளியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து  விடவும். இதை ஒரு பெரிய கண் உள்ள வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும். 

குழந்தைகள் விரும்பி உண்ணும் ஆரஞ்சு சிக்கன் செய்வது எப்படி? 

வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச்  சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறவும். 

சாஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அதாவது,  நீர்க்க இருக்கக் கூடாது. இதுவே பதம்,

இந்த பதம் வந்தவுடன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி ஜாடியில் ஊற்றி மூடி வைக்கவும். 

கேரட் சேர்த்து தக்காளி சாஸ் செய்வது எப்படி?

இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். மிகவும் சுவையான  தக்காளி சாஸ் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)