சுவையான எலும்பு சால்னா செய்வது எப்படி? - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

சுவையான எலும்பு சால்னா செய்வது எப்படி?

அசைவ குழம்புகளில் சால்னா ருசியானது. ரசம் மற்றும் `சூப்` போல உறிஞ்சி சுவைத்துக் கொண்டே சாப்பிட வைத்து விடும்.

எலும்பு சால்னா செய்வது

எலும்புகளை மட்டும் சேர்த்து செய்யப்படும் சால்னா இன்னும் சுவையாக இருக்கும். செய்து சுவைக்கலாமா? 

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் 

ஆட்டு எலும்பு – 1/2 கிலோ 

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் 

தனியாத் தூள் – 2 டீஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

தேங்காய்த் துருவல் – 1/4 மூடி அரைக்கவும் 

வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது) 

எண்ணெய் – தாளிக்க 

சோம்பு – ஒரு டீஸ்பூன் 

கறிவேப்பிலை – ஒரு கொத்து 

குழந்தைகள் விரும்பி உண்ணும் ஆரஞ்சு சிக்கன் செய்வது எப்படி? 

செய்முறை 

* ஆட்டெலும்பைச் சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணையைக் காய வைத்து சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 

எலும்பு சால்னா

* அடுத்து வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கவும், இதனுடன் எலும்பையும் சேர்த்து வதக்கவும். 

கொரோனா கோவிட் பற்றிய பலருக்கும் உள்ள சில சந்தேகங்கள் !

 * மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் தேவைக் கேற்ப உப்பு சேர்த்து கிளறவும். 

 * கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு வேக விடவும். உப்பை சரி பார்க்கவும். 
* எலும்பிற்குப் பதிலாக குருமா காய்கறிகளைப் பொடியாக `கட்’ செய்து வைத்து இதே முறைப்படி சால்னா தயாரிக்கலாம்.