தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. 

குழந்தைகளுக்கு தக்காளி குழம்பு

தக்காளி ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட்  (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு  சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

ஹார்மோன்களின் செயல்பாட்டில் அதிக பங்கு வகிக்கும் தக்காளி கொண்டு தக்காளி குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - ஒன்னு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - தேவையான அளவு

கருவேப்பிலை,உப்பு- கொஞ்சம்

செய்முறை

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேவையானதை எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கருவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைவாக வந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

மிளகாய் வாசம் போனதும் அடுப்பை நிறுத்தவும். (தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம்)

மிகவும் ஈசியாக செய்யகூடிய தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தக்காளி குழம்பு ரெடி.