குழந்தைகளுக்கு மும்பை ஸ்டைல் பேல் பூரி செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு மும்பை ஸ்டைல் பேல் பூரி செய்வது எப்படி?

0

இந்தியாவில் உருவான சுவையான சிற்றுண்டி பேல் பூரி ஆகும். இது ஒரு வகையான சாட் உணவு. பேல் பூரி பெரும்பாலும் கடற்கரை சிற்றுண்டியாக அறியப்படுகிறது. 

மும்பை ஸ்டைல் பேல் பூரி செய்வது
பேல் பூரி பெங்காலியில் ஜால்முரி என்று அழைக்கப்படுகிறது. பேல் பூரி இனிப்பு, உப்பு, புளிப்பு, காரம் என சமநிலையான சுவைகளைக் கொண்டுள்ளது. 

குழந்தைகளுக்கு பேல் பூரி மிகவும் பிடிக்கும். சுவையும், சத்துக்களும் மிகுந்த இந்த பேல் பூரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பொரி - 1 கப்

ஓமப்பொடி - 2 டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

தட்டு வடை - 4

எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்

வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

புதினா / கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு

தக்காளி சாஸ் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் பொரியைப் போட்டு, அதில் தட்டு வடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர,

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, 

இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், சூப்பரான மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)