பீட்ரூட் கோளா உருண்டை செய்வது எப்படி?





பீட்ரூட் கோளா உருண்டை செய்வது எப்படி?

0

நம்மை பொறுத்த வரையில் விலை உயர்ந்த காய்கறி, பழவகைகளில் தான் அதிகம் சத்து நிறைந்துள்ளது, என்று எண்ணிக் கொண்டு விலை குறைவான காய்கறிகளில் கவனம் செலுத்த மறந்து விடுகிறோம் 

பீட்ரூட் கோளா உருண்டை செய்வது

மருத்துவமனை பக்கம் ஒதுங்கும் போது தான் நாம் ஒதுக்கிய காய்கறிகளின் மகத்துவம் புரியும். நம்மில் பலருக்கும் பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காது. 

விலை குறைவான அதே நேரம் உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் வைத்துள்ள பீட்ரூட் கொண்டுள்ளது. 

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. 

இத்தனை நன்மைகளை கொண்ட பீட்ரூட் மீது நாம் கவனம் செலுத்துவது இல்லை. இன்று நாம் இந்த பீட்ரூட் மூலம் செய்ய உள்ள ரெசிபியை கீழே காண்போம்.

தேவையானவை:  

பீட்ரூட் - 1, 

பெரிய வெங்காயம் - 1, 

துவரம் பருப்பு - அரை கப், 

எண்ணெய் - 1 கப்.

அரைக்க:  

காய்ந்த மிளகாய் - 12, 

சோம்பு - அரை டீஸ்பூன், 

சீரகம் - அரை டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:  

பீட்ரூட் கோளா உருண்டை

பீட்ரூட்டைக் கழுவி, தோல் நீக்கி துருவவும். துவரம் பருப்பை ஊற வைத்து, பெருவெட்டாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

துருவிய பீட்ரூட், வெங்காயம், அரைத்த பருப்புக் கலவை மூன்றையும் பிசறி, வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு, வெந்ததும் அரித்தெடுக்கவும். 

அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொள்ளவும். இது, மதிய உணவுக்கு மட்டுமல்ல. மாலை நேரத்துக்குமான டிபன்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)