கோழி முட்டை உருவாவது எப்படி? தெரியுமா? உங்களுக்கு... !

கோழி முட்டை உருவாவது எப்படி? தெரியுமா? உங்களுக்கு... !

0

முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற கேள்வியை நாம் விளையாட்டாகக் கேட்டிருப்போம். முட்டை எப்படி உருவாகிறது? முட்டை அமைப்பு மிகவும் சிக்கலானது. 

கோழியின் இனப்பெருக்க உறுப்பு
ஆனால் சீரானது. கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் முட்டை உருவாகிறது. கோழிக்கு உடலின் இடது புறத்தில் ஒரே ஒரு கருப்பை உள்ளது. சில பறவைகளுக்கு இரு கருப்பைகளும் முட்டைக் குழாய்களும் இருப்பது உண்டு. 

கோழியின் கருப்பை, திராட்சை பழக்கொத்து போல இருக்கும். ஒரு கோழி தனது எட்டு ஆண்டு கால ஆயுளில் சுமார் 1,500 முட்டைகளை இடுகிறது. ஒரு கோழியின் முட்டை உற்பத்தியாகும் நடைமுறை, இரண்டே முக்கால் மணி நேரத்தில் பூர்த்தியாகிறது. 

கோழி முட்டை இட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளாக மற்றோர் மஞ்சள் கரு முழுமையாக முற்றி விடுகிறது. அப்போது, அதில் 6 அடுக்குகள் அடங்கியிருக்கும். 

மஞ்சள் கரு முழுமையாக முதிர்ச்சி அடைந்ததும், முட்டைக் குழாய்க்குள் விழுந்து விடுகிறது. முட்டைக் குழாயில் பல பிரிவுகள் உள்ளன. முதிர்ச்சியடைந்த மஞ்சள் கரு, முதல் பிரிவில் வளர்கிறது. 

இந்தப் பிரிவில் முட்டை சில நிமிடங்களே தங்குகிறது. பிறகு அடுத்த பிரிவிற்கு செல்கிறது. 

கோழியின் இனப்பெருக்கம்

அங்கு வெளிப்புறத்தில் ஒன்றும், உட்புறத்தில் ஒன்றுமாக இரண்டு மெல்லிய தோல்கள் அல்லது சவ்வுகள் கருப்புறத்தை ஓடாக்குவதற்காக உறைகளைப் போல சேர்க்கப்படுகின்றன. 

இந்த நடைமுறை முடிவதற்கு சுமார் 1 மணி நேரம் ஆகிறது. பிறகு முட்டை, கருப்பை அமைந்திருக்கும் சுரப்பிக்குச் செல்கிறது. அங்கு 19 மணி நேரம் தங்குகிறது. 

அடுத்த 14 மணி நேரத்தில் முட்டை ஓட்டின் பல அடுக்குகள் சேர்க்கப்படுகின்றன. பின்னர் முட்டைக்கு மெல்லிய தோல் உருவாகிறது. 

இந்தத் தோல் தான் முட்டைக்கு உரிய நிறத்தைத் தருகிறது. இப்படியாக கோழியின் வயிற்றில் முட்டையின் வளர்ச்சி நடைபெறுகிறது.

கோழிகளில் மஞ்சள் கரு

கோழிகளில் மஞ்சள் கரு
கோழி முட்டையின் மஞ்சள் கருவானது உண்மையில் கோழிகளின் இனப்பெருக்க அணு அல்ல. ஆனால் கருவிற்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய ஒரு பகுதியாகும். 

பெட்டைக் கோழிகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைந்தவுடன் அவற்றின் கரு முட்டைப் பையும், கருக் குழாயும் பல்வேறு விதமான வளர்ச்சியினை அடையும். 

முதல் முட்டை இடுவதற்கு 11 நாளுக்கு முன்னால் கோழிகளின் உடலில் பல்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். 

கோழிகளின் பிட்யூட்டரி சுரப்பியின் முன் பகுதியிலிருந்து எப் எஸ் எச் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோனின் விளைவாக கருமுட்டைப் பையில் கரு முட்டைகளில் வளர்ச்சி ஏற்பட்டு அவை அளவில் அதிகரிக்கும். 

மேலும் செயல்படத் தொடங்கிய கருமுட்டைப் பையும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். 

இரத்தத்திலுள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோழிகளின் எலும்பு மஜ்ஜையில் புரத உற்பத்தி, கல்லீரலில் கொழுப்புகள் உற்பத்தி, 

கோழி முட்டை உருவாவது எப்படி?
கருமுட்டைக் குழாயின் அளவு அதிகரித்து அதில் அல்புமின் புரதங்களின் உற்பத்தி, கோழி முட்டையின் ஓட்டின் உட்பகுதி சவ்வுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யத் தூண்டும். 

கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிய ஆரம்பிக்கும். ஒரு மஞ்சள் கரு முதிர்ச்சியடைய 10 நாட்களாகும். கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிவது மிக மெதுவாக இருக்கும். 

மேலும் அதன் நிறம் வெளிறியதாகவும் காணப்படும். முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள நிறமி ஸான்தோஃபில் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்திலிருந்து பெறப்படுகிறது. 

முதலில் இந்த நிறமி தீவனத்திலிருந்து இரத்தத்திற்குச் சென்று பிறகு மஞ்சள் கருவிற்கு செல்லுகிறது. அதிக அளவிலான கரோட்டினாய்டு நிறமிகள் மஞ்சள் கருவின் மத்தியிலிருந்து அதன் வெளிப்பகுதியிலிருந்து படிய ஆரம்பிக்கிறது. 

பிறகு முழு மஞ்சள் கருவும் உருவாகி முட்டையானது கருமுட்டைப் பையின் கடைசிப் பகுதியில் சென்று சேர்கிறது. சலேசா புரதம் அவற்றின் எதிர்ப்புறத்தில் முறுக்கி முட்டை இட்டவுடன் மஞ்சள் கருவினை முட்டையின் மத்தியில் வைக்கிறது.

கோழி முட்டையின் உட்சவ்வு

கோழி முட்டையின் உட்சவ்வு

கரு முட்டைக் குழாயின் இஸ்துமஸ் பகுதியில் முட்டையின் உட்சவ்வுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த சவ்வுகள் நிறைய பின்னப்பட்ட நார்களால் ஆனவை. 

இவை தண்ணீர் மற்றும் காற்று உட்புக அனுமதிக்கும். மொத்தத்தில் முட்டையின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உருவாகும். ஒன்று உட்சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வு. 

முதலில் இந்த இரண்டு சவ்வுகளும் நன்றாக இணையாமல் இருக்கும். பிறகு முட்டையில் தண்ணீர் மற்றும் உப்புகளும் சேர்க்கப்பட்டு முட்டையின் முழுஉருவம் உருவாகிறது. 

பிறகு முட்டை கர்ப்பப்பையினை சேர்ந்தடைகிறது. வெளிப்புற சவ்வு உட் புற சவ்வினை விட மூன்று மடங்கு தடிமன் அதிகமானது. வெளிப்புற சவ்வு 0.05மிமீ தடிமனும், உட்புற சவ்வு 0.015 மிமி தடிமனும் ஆனது. 

இந்த இரு சவ்வுகளும் ஒன்றாக ஒட்டிக் கொண்டு இருக்கும். ஆனால் முட்டையில் காற்றுப் பை பகுதியில் மட்டும் இவை இரண்டும் பிரிக்கப் பட்டிருக்கும். 

கோழிகள் முட்டையினை இடும் போது அதிலுள்ள காற்றுப் பைகள் சிறிதாக இருக்கும், பிறகு நாளாக நாளாக காற்றுப் பையின் அளவு அதிகரிக்கும்.

முட்டை ஓடு

முட்டை ஓடு

கோழியின் கர்ப்பப்பை அல்லது முட்டை ஓடு சுரக்கும் பகுதியில் முட்டை நீண்ட நேரம் இருக்கும். அங்கு முட்டை ஓடு உருவாகும். 

முட்டை ஓடு உருவாவதற்கு 19 முதல் 20 மணி நேரம் ஆகும். முட்டை ஓடானது கால்சியம் கார்பனேட், புரதம், மியூக்க பாலி சாக்கரைட் கலந்த கலவையால் ஆனது. 

முட்டை ஓட்டின் உட்சவ்வு முட்டை ஓட்டின் உட்பகுதியுடன் ஒட்டியிருக்கும். முட்டை ஓடானது, முட்டையின் உட்சவ்வுடன் பேசல் கேப் எனும் பகுதியால் இணைக்கப் பட்டிருக்கும். 

பேசல் கேப் பகுதி முட்டை ஓட்டின் உட்புறப் பகுதியாகும். முட்டை ஓட்டின் பெரும்பாலான பகுதி பேலிசேட் அல்லது காலம் எனும் மிகச்சிறிய ஓட்டைகள் நிறைந்த அமைப்பால் ஆனது. 

முட்டை ஓட்டின் கடைசிப் பகுதி கியூட்டிகிள் எனப்படும். இது முட்டையினை சுற்றி இருக்கும் ஒரு கரிமப் பொருளாகும். 

கியூட்டிக்கிள் பகுதி முட்டை ஓட்டில் இருக்கும் மிகச்சிறிய துளைகளை அடைத்து விடுவதால் முட்டை யிலிருந்து அதிகப் படியான ஈரப்பதம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. 

மேலும் பாக்டீரியாக்கள் முட்டையினுள் உட்செல்வதும் தடுக்கப்படுகிறது.

முட்டை இடுதல்

கருமுட்டைக் குழாயின் சிறிய பகுதியில் முட்டை உருவாகி பிறகு அக் குழாயின் கடைசிப் பகுதிக்கு நகர்கிறது. 

முட்டை இடுதல்
கோழிகள் பயப்படாமல் இருந்தால் முட்டை கோழிகளின் முட்டை இடும் பகுதிக்கு இணையாக சுழன்று சென்று கரு முட்டைக் குழாயின் பெரிய வெளிப்பகுதி வழியாக வெளியேற்றப் படுகிறது. 

ஆனால் முட்டை இவ்வாறு சுழன்று செல்வது பாதிக்கப்பட்டால் முட்டை கோழிகளின் முட்டை இடும் பகுதி வழியாக உடனடியாக வெளியேற்றப் படுகிறன்றன.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)