உடல் எடையை சீராக வைக்க முட்டை மஞ்சள் கரு போண்டா செய்வது எப்படி?

உடல் எடையை சீராக வைக்க முட்டை மஞ்சள் கரு போண்டா செய்வது எப்படி?

0

வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என முழு முட்டையை நீங்கள் காலை உணவாக எடுத்து கொண்டால் உங்களுக்கு பசி எடுக்க நீண்ட நேரம் ஆகும். 

உடல் எடையை சீராக வைக்க முட்டை மஞ்சள் கரு போண்டா

முட்டையை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக அதன் மஞ்சள் கரு கொழுப்பைக் குறைத்து உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தேவையான பொருட்கள்

3 முட்டை

1 பெரிய வெங்காயம்

1 பச்சை மிளகாய்

கருவேப்பிலை

உப்பு தேவைக்கு

எண்ணெய் பொரிக்க

செய்முறை

முதலில் முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் கடுகு தாளித்து அதில் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

நன்றாக வதங்கிய பின்பு அதில் முட்டையின் மஞ்சள் கருவை போட்டு கலந்து விட வேண்டும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். சூடு தணிந்த பின்பு அதை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கடலை மாவு சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். 

இப்பொழுது அதில் கொட்டி வைத்திருக்கும் உறுப்பினர்களே நனைத்து பொரித்தெடுக்கவும். சுவையான போண்டா ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)