அம்மிக்கல்லில் மசாலா அரைத்தால் இவ்வளவு நன்மையா?





அம்மிக்கல்லில் மசாலா அரைத்தால் இவ்வளவு நன்மையா?

0

உணவை சிலர் பசிக்காவும், சிலர் ருசிக்காகவும் சாப்பிட்டு வருகின்றனர். அதுவும் சமூக வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கில் உணவுப் பிரியர்கள் குரூப் ஆரம்பித்து வார இறுதி நாட்களில் சாப்பிடுவதற்காக பல மைல் தூரம் பயணிப்பது உண்டு. 

அம்மிக்கல்லில் மசாலா அரைத்தால் இவ்வளவு நன்மையா?
எந்த ஊரில் என்ன ஸ்பெஷல் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரிய ஸ்டார் ஹோட்டல்களை விட தெரு முனையில் இருக்கும் சாதாரண உணவகங்கள்  மக்களின் அபிமானத்தை பெருகின்றன. 

இதற்கெல்லாம் காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மசாலா, சட்னி என்று அவரவரது ஸ்டைலில் செய்வதால் தான் அவை பிரபலமாகிறது. 

பாட்டியின் சமையலிலும், அம்மாவின் சமையலிலும் இருந்த தனி சுவையும், மணமும் இன்றைய தலைமுறையினரின் சமையலில் இருப்பதில்லை. 

எத்தனையோ எண்ணெய்கள், மசாலாக்களை போட்டு சமைத்தாலும் அன்றைக்கு அம்மிக்கல்லில் அம்மா அரைத்து வைத்த குழம்பின் ருசிக்கு ஈடு இணையில்லை என்றுதான் கூற வேண்டும். 

சமையலறையில் இன்றைக்கு மின்சாரத்தில் இயங்கும் மிக்ஸியும் கிரைண்டரும் இடம் பிடித்து விட்டன. 

மிக்ஸியில் மசாலா, சட்னி அரைத்து பயன்படுத்துவதை விட அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் அரைத்து செய்யப்படும் மசாலாவிற்கும் இட்லிக்கு உபயோகிக்கும் சட்னிக்கும் தனி சுவை உண்டு.

பழைய வீடுகளில் உள்ள அம்மிக்கல், ஆட்டுக்கல் வெறும் காட்சிப் பொருளாக இருந்தது. இதை பயன்படுத்தும் விதம் கூட தெரியாத நிலையில் இளம் பெண்கள் இருந்து வருகின்றனர். 

அம்மிக்கல், ஆட்டுக்கல்
தற்போது மின் பற்றாக்குறையினால், பழையபடி அம்மிக்கல், ஆட்டுக்கல்லை வாங்கி வீடுகளில் பயன்படுத்தும் நிலைக்கு பெண்கள் தள்ளப் பட்டுள்ளனர்.

இன்றைக்கு உடனடியாக சமைக்கும் மசாலாக்கள் வந்தாலும் அம்மியில் இஞ்சி பூண்டு அரைத்து குழம்பு செய்தாலோ, இரும்பு வாணலில் மிளகு, 

வத்தல், மல்லி வறுத்து அரைத்து அம்மியிலோ, ஆட்டுக்கல்லிலோ அரைத்து செய்யப்படும் குழம்புக்கு தனி ருசி உண்டு. 

இதனாலேயே இன்றைக்கு பலரும் மீண்டும் பாரம்பரிய பாத்திரங்களையும், பொருட்களையும் வாங்கி வருகின்றனர். சரி அம்மிக்கல்லில் சட்னி செய்வதால் ஏற்படும் நன்மைகளை தற்போது பார்க்கலாம்.

சுவை

முழுமையான சுவையை பெறுவதற்கு ஆட்டுக்கல்

நீண்ட காலமாக ஒரு உணவுப் பொருள் நம்மிடையே பயணம் செய்துக் கொண்டு வருகிறது என்றால், அதன் சுவை தான் அதற்கு காரணம். 
நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்முறை !

ஆனால், தற்போது மின்னனு கருவிகளின் மூலம், நம் செய்யும் சட்னி, அதன் இயற்கை சுவையை கெடுத்து விடுகிறது. எனவே, சட்னியின் முழுமையான சுவையை பெறுவதற்கு ஆட்டுக்கல்லை பெறுங்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்ற பழங்கால பொருட்களை கொண்டு, குழம்பு வகைகள், சட்னி போன்ற உணவுகளை செய்யும் போது, மனமாகவும், சுவையாகவும் இருக்கும். 

இதுமட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும், அம்மிக்கல்லில் உணவு சமைப்பது சிறந்தது. ஆனால், உடல் உழைப்பு காரணமாக, யாரும் தற்போது செய்ய முடிவதில்லை. 

பூண்டு மீன் குழம்பு செய்முறை !

உங்களுக்கு நேரமும், உடல் வலிமையும் இருந்தால், ஆட்டுக்கல்லை பயன்படுத்துங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஆட்டுக்கல்லில் உணவுகளை அரைப்பதால், அது நமது உடலின் கொழுப்பை குறைப்பதற்கு நன்கு உதவி புரியும். அதற்காக, தினமும் எதையாவது போட்டு ஆட்டு உரலில் அரைத்துக் கொண்டிருக்க தேவையில்லை. 

தேவையான சமயங்களில் மட்டும் செய்தால் போதும். காலை நேர உணவுகள் மட்டுமின்றி, மதிய நேர உணவு வகைகளிலும், சட்னியை நாம் பயன்படுத்துவது சிறந்தது. 

எனவே, முறையான வழியில் சட்னி செய்து, நாவிற்கு மேலும் சுவையூட்டுங்கள்.

இது பழசு ஆனாலும், தனி மவுசு தான் நம் பண்டைய மக்களின் அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள்....

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)