ப்ரோ பயாடிக் உணவு (Probiotic Diet) என்றால் என்ன?





ப்ரோ பயாடிக் உணவு (Probiotic Diet) என்றால் என்ன?

0

இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒரு வகை நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். 

ப்ரோ பயாடிக் உணவு என்றால்
மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.

நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுக ளில் அதிக அளவில் காணப்படும். 

இவற்றையே ப்ரோ பயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. 

இவை உணவு செரித்தலுக் குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?

புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே… உடம்புக்கு ஆகாது! என்று பாட்டி கால த்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். 

ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும் போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம் தானே. 

நம்மில் பலரும் தயிர் சாதம் என்றாலே, ஏதோ ஏழை களின் உணவு என்பது போல, இளக்காரமாக நினைக்கிறோம். 

தயிர் சாதம் ப்ரோ பயாடிக் உணவு

அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், இந்த க்ளை மேட்ல போய் தயிர் சாதம் சாப்பிடுவாங்களா?” என்று தோள் குலுக்கித் தவிர்த்து விடுவோம். 

ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை ‘ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.

நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.

தொப்பை போட வைக்கும் செயற்கை குளிர்பானங்கள்

இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும் போது, வயிறு தொடர்பான கோளா றுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்து க்கொள்ளும் போது இது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைய விட்டு சில மணி நேரங்கள் கழித் துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். 

இந்தச் செயல் தான், முதல் நாள் அரைத்து வைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச்செய்கிறது. 

ரத்தம் குடிக்கும் வவ்வால்கள்

இதற்குள் தான் பைஃபைடோ மற்றும் லாக்டோபேசிலஸ் ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.

லாக்டோபேசிலஸ் பாக்டீரியம் கிருமி தரும் நன்மைகள்

லாக்டோபேசிலஸ் பாக்டீரியம் கிருமி தரும் நன்மைகள்

இரைப்பை, முன் சிறுகுடலில் புண்களை ஏற்படுத்தும் கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. 

ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும்

கல்லீரலில் சேரும் கொழுப்பு, நீரிழிவு நோய், எய்ட்ஸ், சிறுநீர் செல்லும் பாதைகளில் ஏற்படும் அழற்சி ஆகிய பாதிப்புகளையும் குறைக்க உதவுகிறது.

பைஃபைடோ பாக்டீரியம் கிருமி தரும் நன்மைகள்

பைஃபைடோ பாக்டீரியம் கிருமி தரும் நன்மைகள்

பெருங்குடல் புற்றுநோய், குடல் அழற்சி நோய், உடல் பருமன், குடல் எரிச்சல் நோய் ஆகிய பாதிப்புகளைத் தவிர்க்க உதவுபவையாக இந்தக் கிருமிகள் இருக்கின்றன.

மேலும் இந்த இரண்டு கிருமிகளும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரஸுக்கு எதிராகச் செயல்படுகின்றன.

விலங்குகள் புரியும் விந்தைகள்

இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயா டிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள் ளலாம்.

தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளை கட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.

நன்மைகள்

ப்ரோ பயாடிக் உணவு நன்மைகள்

வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறு கள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.

தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்க ளுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.

கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவை யற்ற கொழுப்பு கரைந்துவிடும்.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோ பயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். 

கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.

முடிவு

தாவரங்களின் வேர்களில் வாழும் நுண் கிருமிகள்

எப்படிச் சில தாவரங்களின் வேர்களில் வாழும் நுண் கிருமிகள் அந்தத் தாவரத்தை வைத்து வாழ்ந்து கொண்டு அதே நேரம், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து தருகின்றன. 
கடுகு எண்ணெய் தயாரிப்பது எப்படி?

அதே போல உடலுக்குத் தேவையான சில வகைச் சத்துக்கள் கிடைப்பதற்கும், உணவு ஜீரணமாவதற்கும் இந்த நுண்கிருமிகள் உதவுகின்றன. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)