புரோட்டீன் மிக்க அவித்த முட்டை மிளகு பிரட்டல் செய்வது எப்படி?





புரோட்டீன் மிக்க அவித்த முட்டை மிளகு பிரட்டல் செய்வது எப்படி?

0

உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உணவு தான் முட்டை. பலநூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் உணவு தான் இந்த முட்டை. இந்த முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? 

புரோட்டீன் மிக்க அவித்த முட்டை மிளகு பிரட்டல்
ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் வரை சாப்பிடலாம்? ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. 
ஆனால், இந்த வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர் தான் இருக்கிறது. 10 சதவீதம் மட்டுமே புரதம் இருக்கிறது. கொழுப்பும் சுத்தமாக இல்லை. கார்போ ஹைட்ரேட் சத்தும் மிகக்குறைவு. 

கார்போ ஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம் உள்ளன. இதைத்தவிர, செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 போன்ற 10 வகையான வைட்டமின்கள் இருக்கின்றன. 

இதைத்தவிர, கால்சியம், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஆனால், மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. வைட்டமின் டி உள்ளது. 

இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலு தரக்கூடியது. இந்த மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்ச கொழுப்பால், ஹார்ட் அட்டாக் வரும் என்றார்கள். 

ஆனால், அதற்கு பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், ஆபத்து எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல, வாரம் 6 முட்டைகளை சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில் தான் இருக்கும் என்பதும் கண்டறியப் பட்டுள்ளது.

முட்டையில் விட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக உள்ளது. அதோடு புரதச் சத்துக்கு முட்டை தான் சரியான உணவாக இருக்கும். உடல் எடையைக் குறைப்போருக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கப் படுகிறது. 

அதே சமயம் கட்டுமஸ்தான உடலைப் பெறவும் முட்டை சாப்பிடுவார்கள். முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் டி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 

இதில் புரோட்டீன் மிக்க அவித்த முட்டை மிளகு பிரட்டல் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

தேவையான  பொருள்கள் :

முட்டை - 2     

மிளகு - 1 தேக்கரண்டி

உப்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை :

முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும். முட்டை  ஆறியவுடன் ஓட்டை நீக்கி விட்டு துருவியில் வைத்து  துருவிக் கொள்ளவும்.

அடுப்பில்  கடாயை  வைத்து  எண்ணெய்  ஊற்றி  சூடானதும்  மிளகுத் தூள், உப்பு  போட்டு ஒரு  நிமிடம் கிளறவும். பிறகு முட்டை துருவலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி. இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷாக கொடுக்கலாம். அல்லது சான்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)