வெஜிடபிள் கூட்டு செய்வது எப்படி?





வெஜிடபிள் கூட்டு செய்வது எப்படி?

தேவையானவை: 

கேரட், வெள்ளரிக்காய், கத்திரிக்காய், சௌசௌ, பச்சை 

மிளகாய் - தலா ஒன்று, 

பீன்ஸ் - 6, 

துவரம் பருப்பு - ஒரு கப், 

தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், 

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன். 

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, 

சீரகம் - கால் டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

வெஜிடபிள் கூட்டு செய்வது

கொடுத்துள்ள காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். 

நடிகையின் லிப் லாக் முத்தம்.. இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ !

மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும். 

வேக வைத்த காய்கறிக் கலவையுடன் அரைத்ததை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும்.

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட... வெஜிடபிள் கூட்டு தயார்.

Tags: