கிறிஸ்துமஸ் சாக்லேட் ப்ரௌனி செய்வது எப்படி?





கிறிஸ்துமஸ் சாக்லேட் ப்ரௌனி செய்வது எப்படி?

0

பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களில் எப்போதுமே சாக்லேட்டிற்கு என தனி இடம் உண்டு. நம் வாழ்வில் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ள சாக்லேட்டை விட வேறு என்ன வேண்டும். 

கிறிஸ்துமஸ் சாக்லேட் ப்ரௌனி

இது உங்கள் பசியை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உற்ற நண்பனாகவும் இருக்கிறது.

சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு இவ்வளவு பிரச்சனை வருவது, அவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்கின்ற சர்க்கரையினால் தான். டார்க் சாக்லேட் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரங்களில் ஒன்று. 

மாதவிடாயின் போது பெண்களுக்கு தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாக இரும்புச்சத்து உள்ளது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்த இழப்பு உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தாது. 

ஆனால் அது ஒருவிதமான சோம்பலை தரக்கூடும். எனவே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரும்புச்சத்து இழப்பை குறைக்க டார்க் சாக்லேட் உதவுகிறது. 

இதனை உட்கொள்வதன் மூலமாக உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சீராக பாய்ந்து, சோம்பலை குறைத்து சுறுசுறுப்பாக்குகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் பலருக்கும் நினைவிற்கு வருவது. 

கேக்கில் பல வகை இருந்தாலும் அதில் ஒன்று சாக்லேட் ப்ரௌனி. இதுவரை நீங்கள் சாக்லேட் ப்ரௌனியை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, அளவாகவே சாப்பிட முடியும். 

ஆனால் அதையே வீட்டில் உங்களுக்கு தேவையான அளவு செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்? அதை வீட்டில் எப்படி செய்வதென்று பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கப்

உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப்

பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்

சாக்லேட் சிப்ஸ் - 1 கப்

கொக்கோ பவுடர் - 1/3 கப்

வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 3/4 கப்

முட்டை - 2

உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றி பின் ஒரு பேக்கிங் ட்ரே/பேனில் அலுமினியத் தாளை விரித்து, மேலே எண்ணெயைத் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பேனில் வெண்ணெயைப் போட்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் உருக வைக்கவும். பின் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது அதில் கோக்கோ பவுடர், வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

பின் அதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுத்து அதை எண்ணெய் தடவிய அலுமினியத் தாளில் ஊற்றி தட்டையாக பரப்பி விடவும்.

இறால் வறுவல் செய்முறை !

பிறகு அந்த ட்ரேயை ஓவனில் வைத்து, 20 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், சுவையான சாக்லேட் ப்ரௌனி தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)