இறால் வறுவல் செய்முறை | Shrimp Fry Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
அசைவ உணவுகளிலேயே சுவைக்க‌ வித்தியாச மான தாகவும், அதே நேரத்தில் சுவையான தாகவும் இருக்கும்
இறால் வறுவல்
இறால் என்றால் அது மிகை அல்ல‍. இந்த இறால் வறுவலை எப்ப‍டி சமைப்ப‍து என்பதைப் பார்ப்போமா..

தேவையானவைகள்..

இறால் – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சை மிளகாய் – 2

இஞ்சிப் பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்க

கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

• முதலில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 

 • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப் பிலை போட்டு தாளிக்கவும்.

இறால் வறுவல் செய்முறை

• இதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், பச்சை மிள காய் சேர்த்து வதக்கவும். 

• பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

• இதனுடன், மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக் கவும். 

• உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து தீயை குறைந்த அளவில் வைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.

• கடைசியாக கொத்த மல்லி தழை தூவி இறக்கவும. 

• நாவில் நீர் ஊறச் செய்யும் இறால் வறுவல் ரெடி.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚