நியூட்ரிஷியஸ் மிக்சர் செய்வது எப்படி?





நியூட்ரிஷியஸ் மிக்சர் செய்வது எப்படி?

0
தேவையானவை : 
அரிசி மாவு – 250 கிராம், 

கடலை மாவு – 250 கிராம், 

மிளகாய்த்தூள் – 25 கிராம், 

முந்திரிப் பருப்பு – 10,

பாதாம் பருப்பு – 10, 

பிஸ்தா பருப்பு – 10,

அவல் – ஒரு கப், 

பொட்டுக்கடலை – ஒரு கப்,

வேர்க்கடலை – ஒரு கப், 

கறிவேப்பிலை, சீரக மிட்டாய் – சிறிதளவு,

ஓமம் (வறுத்துப் பொடித்தது) – 2 டீஸ்பூன்,

எண்ணெய் – 250 மில்லி,

நெய் – 2 டீஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை : 
நியூட்ரிஷியஸ் மிக்சர் செய்வது எப்படி?
அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் சிறிதளவு எடுத்து (சம அளவு) உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் திருப்பி வேக விட்டு எடுக்கவும். 

அரிசி மாவு, கடலை மாவை மீண்டும் சம அளவில் எடுத்து, உப்பு சேர்த்து, பொடித்த ஓமத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். 

சிறிதளவு கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பூந்தி தேய்த்து எண்ணெயில் வேகவிட்டு எடுக்கவும். 

அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து எடுக்கவும். பிஸ்தா, முந்திரி, பாதாம் பருப்பை நெய்யில் வறுக்கவும். 

கறிவேப்பிலையை பொரிக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, மிளகாய்த்தூள், சீரக மிட்டாய் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு:

காரம் அதிகம் போடாமல் தயாரித்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)