சில்லி கொத்து சப்பாத்தி செய்வது எப்படி?

சில்லி கொத்து சப்பாத்தி செய்வது எப்படி?

0

தேவையானவை : 

சப்பாத்தி – 4

வெங்காயம் – 2

தக்காளி – 2

குடை மிளகாய் – ஒன்று (சிறியது)

இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – ஒன்று

தனி மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி

சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி

முட்டை- 2

குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம் செய்வது எப்படி?

செய்முறை :  

சில்லி கொத்து சப்பாத்தி

சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, லவங்கம், பட்டை தாளிக்கவும். 

தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

ஆணின் பேன்ட் ஜிப்பை.. சிறுமி கையை பிடிப்பது.. பெண் நீதிபதி சர்ச்சை !

குடை மிளகாய் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து வதக்கவும். சப்பாத்தியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். 

முட்டை வெந்து கலவையுடன் ஒன்றாக ஆனதும் கறிவேப்பிலை சேர்த்து புரட்டி இறக்கவும். சுவையான சில்லி கொத்து சப்பாத்தி தயார். சப்பாத்தி அதிகமாய் மீந்து போனால் இப்படி செய்யலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)