இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு தளர்ச்சி. நரம்புகள் உடலின் மிக முக்கிய பணிகளை செய்கின்றது. 

நரம்பு தளர்ச்சி குணமடைய

குறிப்பாக மனிதனின் உடலில் 10,000 நரம்புகள் உள்ளது. ஒரு மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கும். 

இத்தகைய நரம்புகள் பாதிப்பு அடையும் போது உடலில் சில அறிகுறிகள் ஏற்படும்.

எழுதும் போது நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலைத் தடுமாற்றம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. 

ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்க வில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும்.

எப்சம் உப்பு என்பது என்ன? எவ்வாறு பயன்படுத்துவது?

அதே போல் இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். 

எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

சரி இந்த நரம்பு தளர்ச்சி  பிரச்சனையை சரி செய்ய கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை தினமும் கடைபிடித்தாலே போதும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்து விட முடியும். 

சரி வாங்க அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

வைட்டமின் பி 12

வைட்டமின் பி 12

கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில் தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. 

இதனால் தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். 

எப்சம் உப்பில் செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க் !

அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

முருங்கை கீரை

முருங்கை கீரை

முருங்கை கீரைக்கு பொதுவாக உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகம் உண்டு. பலவிதமான நோய்களுக்கு கண்கண்ட மருந்து, உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும். 

முருங்கை கீரையை சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும். 

பழங்கள்

பழங்கள்

நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் அதிகளவு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். 

கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) சாண்டெர்ஸ் வாழ்க்கையின் திருப்பு முனை !

தற்போது உலகமெங்கும் அதிகமாகி வரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க வேண்டுமா? 

40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜாதிக்காய் தூள்

ஜாதிக்காய் தூள்

இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.

லவங்கப்பட்டை

தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.

அவகோடோ

அவகோடோ

அவகோடோ நரம்பு மண் டலத்தை வலுப்படுத்துகிறது. வேறு பழங்களுடன் ஒப்பிடும் போது அவகேடோவில் அதிக ஊட்டசத்துகள் நிறைந்திருக்கிறது. 

திருஷ்டி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

எனவே நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் அவகோடோ பழத்தினை அடிக்கடி சாப்பிடுங்கள்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும். 

வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.

பெண் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் !

ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். 

மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்ப நிலையிலேயே களைந்து விடும்.

மீன்

மீன்

அசைவம் சாப்பிடுபவர்கள் உணவில் அதிகம் மீன் சேர்த்து வரலாம். உடல் ஆற்றலாக செயல்பட கொழுப்பு அமிலங்கள் தேவை. அவை மீன் உணவில் நிறைந்திருக்கிறது. 

கொழுப்பு அமிலம் குறைவால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உணவில் மீனை அதிகம் சேர்த்து வரலாம்.

பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழம்

பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், தேறாத உடல் கூட பேரிச்சையுடன்  பால் கலந்து சாப்பிடு வர தேறும். 

சுன்னத் என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... ! 

பலவீனமான உடல் கூட பலம் பெரும். இந்த நரம்பு தளர்ச்சிக்கு நாட்டு மருந்து ஒரு சிறந்த மருவமாகும்.

எனவே மேல் கூறப்பட்டுள்ள வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றினை தொடர்ந்து பின் பற்றி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பிரண்டை

பிரண்டை

உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் நரம்பு சம்பந்தமான அனைத்து  பிரச்சனைகளும் சரியாகி விடும்.