வியர்வை துர்நாற்றத்தை விரட்ட நலங்கு மாவு பயன்படுத்துங்கள் !





வியர்வை துர்நாற்றத்தை விரட்ட நலங்கு மாவு பயன்படுத்துங்கள் !

0

வண்ண வண்ண  சோப்புகள் உலா வருவதற்கு முன்னால் நம் குளியலறையை அலங்கரித்தவை  நலங்கு மாவு. அதன் ரம்மியமான வாசனை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

வியர்வை துர்நாற்றத்தை விரட்ட
இன்று குழந்தைகளுக்கென பிரத்யேகமாக பல்வேறு சோப்புகள் வந்தாலும் நாம் வீட்டிலேயே தயாரிக்கும் குளியல் பொடிக்கு ஈடாகாது.

நலங்கு மாவில் கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, 

எப்சம் உப்பில் செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க் !

பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு மாவு தயாரிக்கப்படுகிறது.

நாட்டு மருந்து கடைகளில், இப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆண்கள் பயன்படுத்தும் போது, மஞ்சள் சேர்க்காமல், தயாரித்துக் கொள்ளலாம். சருமத்தை  பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.  

நலங்கு மாவை உபயோகிப்பது, பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள், எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது .

நலங்கு மாவு பொடி என்றால் என்ன ?

பாரம்பரியமாக நம் முன்னோர்கள் குளியலுக்கு பயன்படுத்திய மூலிகை பொருட்களின் கலவையே நலங்கு மாவு ஆகும்.

இது கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, செண்பகப்பூ, ரோஜா இதழ்கள் மற்றும் பல வகையான மூலிகை பொருட்கள் கலந்தது.

இது குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது மேலும் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் அண்டாது.

நலங்கு மாவு உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள்

இன்றைய தலைமுறையினருக்கு, முக்கிய பிரச்னையாக இருப்பது முகப்பரு. சிலர், பருக்களை கிள்ளி விடுவதால், அந்த இடத்தில் பரு இருந்ததற்கான  அடையாளம் அப்படியே இருக்கிறது. 

தலைமுடியில் படியும் அழுக்கு மற்றும் நச்சுக்களை நீக்க எப்சம் உப்பு !

இதற்கு சிறந்த தீர்வை தருகிறது, நலங்கு மாவு. நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிக்கும் போது, முகப்பருவானது  குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும். 

வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு, நிறைய பேர் செயற்கை வாசனை பொருட்களை உபயோகிக்கின்றனர். 

கை இடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது, சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கி அதுவே பெரிய தொந்தரவை கொடுத்து விடும். 

வெயில்  சுட்டெரித்தால், வெளியில் செல்லவே பயப்படுவர். நலங்குமாவை பயன்படுத்தி, வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். 

இதை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைகளும் ஏற்படுவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு,  நலங்கு மாவை தேய்த்து குளிக்க வைப்பதால், அவர்களின் சருமம் பாதுகாக்கப்படுகிறது.

எண்ணெய் பசையை நீக்க

சருமத்திலிருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குகின்றது. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது. தோலை பளபளப்பாக்கும்.

சருமத்தின் அமிலத்தன்மையை நிலைப்பாட்டில் வைக்கின்றது. இதில் கலந்துள்ள மஞ்சள்  முகத்திலுள்ள மாச, மரு நீக்கி தோலுக்கு ஊட்டமளிக்கும். உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

நரம்பு தளர்ச்சி குணமடைய வைட்டமின் பி12 !

வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும். வியர்க்குரு தொல்லையும் இருக்காது.

இதை தினமும் பூசி வர உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை தடுக்கும். நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)