எப்சம் உப்பு என்பது என்ன? எவ்வாறு பயன்படுத்துவது?





எப்சம் உப்பு என்பது என்ன? எவ்வாறு பயன்படுத்துவது?

0

சமீபத்தில் ஒரு மூலப்பொருள் பரவலாக எல்லா இடத்திலும் அறியப்பட்டு வருவது என்றால் அது எப்சம் உப்பு. இந்த உப்பு நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு இல்லை. 

எப்சம் உப்பு என்பது என்ன?
இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்ட உப்பு இது என்பதால் "எப்சம்" உப்பு என்று அழைக்கப்படுகிறது. 

எப்சம் உப்பு ஒரு சுத்தமான கனிம கூறாகும் . இது இயற்கையாக கிடைக்கும் ஒரு பொருள் என்பதால் பலவித மந்திரங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது இந்த உப்பு. 

எப்சம் உப்பில் முக்கியமாக மக்னீசியம் மற்றும் சல்பேட் உள்ளது. பலவித கோளாறுகளுக்கு இயற்கையான தீர்வை இந்த உப்பு வழங்குகிறது.

எப்சம் உப்பு பல்வேறு அற்புத நன்மைகளைக் கொண்டுள்ளது.சரி இந்த எப்சம் உப்பு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

எவ்வாறு வேலை புரிகிறது?

எப்சம் உப்பில் முக்கியமாக இருப்பது மெக்னீசியம் மற்றும் சல்பேட் ஆகியவை ஆகும். இரண்டும் தத்தமது வழிகளில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. 

நிறம் மாறிய உப்பு சோடா ஏரி எனப்படும் பழமையான லோனார் ஏரி !

ஒரு புறம் மெக்னீசியம் உடலில் உள்ள கிட்டத்தட்ட 325 என்சைம்களைக் கட்டுப்படுத்துகிறது, 

நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளில் உதவுகிறது, தமனிகள் கடினமாவதைத் தடுத்து, அழற்சியைக் குறைக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

எப்சம் உப்பு பெரும்பாலும், மருந்து கடைகளில், மளிகைக் கடைகளில் மற்றும் தோட்டத்திற்கான பொருட்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும். 

இந்த மந்திர உப்பை சிறிதளவு தூவுவதால் பல அற்புத நன்மைகள் கிடைக்கிறது. இந்த உப்பு பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு விதமும் தனித்தனியாக தயாரிக்கபட்டாலும், வேதியல் ரீதியாக அனைத்தும் சமமாக உள்ளன.

பக்க விளைவுகள்

எப்சம் உப்பின் பக்க விளைவுகள் அபாயத்தை தோற்றுவிக்கும் தன்மை கொண்டது. அதனால் தேவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு, தீவிர வயிற்றுப்போக்கு, உயர் கால்சியம் அளவு, சோர்வு, தசை வலிப்பு, தசைசுரிப்பு 

நம் இந்தியாவை பற்றி நாம் அறிந்திராத முக்கியமான தகவல்கள் !

அல்லது தசை வலி, ஒழுங்கற்ற கண் செயல்பாடு போன்றவை எப்சம் உப்பின் பக்க விளைவால் உண்டாகும் சில பாதிப்புகளாகும். 

எப்சம் உப்பை உடலின் வெளிப்புறம் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும், இதனை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)