திரிகடுகம் தேநீர் தயார் செய்வது எப்படி?





திரிகடுகம் தேநீர் தயார் செய்வது எப்படி?

திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையே ஆகும். பொதுவாக சுக்கு நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். 
திரிகடுகம் தேநீர் தயார் செய்வது
இதனால் இதனை நிறைய  அஜீரணக் கோளாறுக்கான மருந்துகளில் முதன்மையாக சேர்க்கின்றனர். சாதாரண சளி, இருமல் ஆகியவற்றிற்கு தொன்று தொட்டு நாம் உபயோகப்படுத்துவது  மிளகைத் தான்.

திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். 

திரிகடுக சூரணத்தை பயன்படுத்துவதால் பலவித நோய்களுக்கும் தீர்வாக இருக்கும். 

விட்டு விட்டு வரும் முறைக் காய்ச்சலைப் போன்ற பலவித காய்ச்சல்கள், வயிற்று உப்புசம், உணவில் விருப்பமின்மை, பசியின்மை, செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள், 

கழுத்தில் தோன்றும் நோய்கள், தோல் நோய்கள், இருமல், ஜலதோஷம், சர்க்கரை போன்ற நோய்களுக்கு  திரிகடுக சூரணத்தை தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.

திரிகடுகு சூரணத்தை - 2 கிராம் அளவில் உணவுக்கு பின் காலை, மதியம், இரவு என இருவேளை சாப்பிடலாம். தேனில் கலந்து சாப்பிட்ட வேண்டும். சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல், கபம், நீங்கும். நன்கு பசியைத் தூண்டும்.
தேவையானவை

சுக்கு

மிளகு

திப்பிலி

செய்முறை :

சுக்கு, மிளகு, திப்பிலி, இவை மூன்றையும் திரிகடுகம் என பொதுவாக அழைக்கப்படும். இம்மூன்றையும் சரி அளவு கலந்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 

சூடான தேநீரில் ஒரு சிட்டிகை அல்லது இரண்டு சிட்டிகை திரிகடுகப் பொடியை கலந்து பருகினால் கபம், சளி, புகைச்சலான இருமல், ஒவ்வாமையினால் உண்டாகும் (allergy) இருமல் ஆகியவை நீங்கும். 

திரிகடுகம் உடம்பின் சூட்டை கூட்டுவதால் அளவாக அருந்துவது உடலுக்கு நல்லது.

குறிப்பு
உங்கள்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற டீ மற்றும் காபி வகைகள்.
நீங்கள் காலை ,மாலை, இரவு என விரும்பி நேரத்தில் சாப்பிடலாம். எப்போதும் உணவு பொருட்கள் தூய்மையாக இருப்பது நன்று.
Tags: