பொரி சாட் மசாலா தயார் செய்வது எப்படி?

பொரி சாட் மசாலா தயார் செய்வது எப்படி?

பொரி குறைந்த கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளது. இதனால் டயட் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் தாராளமாக பொரி சாப்பிடலாம். குளுட்டன் என்பது ஒரு வகை புரதம். 
பொரி சாட் மசாலா தயார் செய்வது
இந்த குளுட்டன் பொரியல் இல்லை என்பதால் டயட் இருப்பவர்கள் தாராளமாக தங்களது உணவு பட்டியலில் பொரியை சேர்த்து கொள்ளலாம். 

பொரியில் உள்ள நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்களின் பசியை போக்குவதோடு, அதிகப்படியாக சாப்பிடுவதையும் தடுக்கிறது. 

அதாவது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்ள உதவி செய்யும். 

இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். பொரியில் உள்ள நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்களின் பசியை போக்குவதோடு, அதிகப்படியாக சாப்பிடுவதையும் தடுக்கிறது. 
அதாவது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்ள உதவி செய்யும். இதன்மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். 

பொரியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பதால் சிறந்த தின்பண்டமாகும். 

எண்ணெய்யில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக காரப்பொரி, மசாலா பொரி, பேல் பூரி போன்ற ஆரோக்கியமான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம். 

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பொரி சாட் மசாலா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :
பொரி – 1 கப்,

ஓமப் பொடி 1 கப்,

வெங்காயம் - 1, 

தக்காளி தலா – 1,

கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

சாட் மசலா – 1 டீஸ்பூன்,

சாட் மசாலா செய்ய :

சீரகம் - கால் கப், 

தனியா - கால் கப்,

மாங்காய்த் தூள் - கால் கப்,

கருப்பு உப்பு, மிளகு – தலா அரை டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 8,

செய்முறை :
சாட் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக வெயிலில் காய வைத்து அரைத் தெடுத்தால் சாட் மசலா தயார். தக்காளி, வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் சாட் மசாலா, ஓமப் பொடி, வெங்காயம், தக்காளி, கொத்த மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சூப்பரான பொரி சாட் மசாலா தயார்.
இதை சாப்பிடும் போது தான் செய்ய வேண்டும். முதலிலேயே செய்து வைத்து விட்டால் நமத்து விடும்.
Tags: